Advertisements

breaking news

Breaking News
Loading...

Total Pageviews

New Post

Rss

Sunday, 9 April 2017
சன் டிவி யை எதிர்கின்றோம்

சன் டிவி யை எதிர்கின்றோம்

சன் டிவி யை எதிர்கின்றோம்

சில மாதங்களுக்கு முன் வெளி வந்து வசூல் செய்த இளைய தளபதியின் பைரவா திரைப்படத்தை தொலைக்காட்சியில் ஔிபரப்ப இருக்கும் சன் டிவியை முற்றிலும் எதிர்கின்றோம் ...உன் தொலைக்காட்சி பெயரை பிரபல படுத்த .....தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் எங்கள் அண்ணன் அவர்களுக்கு செல்வாக்கு இருக்கு என்று எச்ச எண்ணத்தில் ...திரைப்படத்தை வெளியிடாதே ...அசிங்கப்பட்டுறவ.....நிருத்திவிடு நிருத்திவிடு .....

உண்மையான தளபதி ரசிகர் மட்டும் மத்த குரூப்க்கு ஷேர் பண்ணுங்க...

Saturday, 8 April 2017
தமிழ்நாடு
விவசாயிகளுக்கு ஆதவாக இளைஞர்கள் போராட்டம்! ஆளுனர் மாளிகை முற்றுகை.. கைது

தமிழ்நாடு விவசாயிகளுக்கு ஆதவாக இளைஞர்கள் போராட்டம்! ஆளுனர் மாளிகை முற்றுகை.. கைது


தமிழ்நாடு
விவசாயிகளுக்கு ஆதவாக இளைஞர்கள் போராட்டம்! ஆளுனர் மாளிகை முற்றுகை.. கைது

சென்னை,
டில்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னை ஆளுனர் மாளிகையை முற்றுகையிட்ட தமிழ்நாடு இளைஞர்கள் விவசாய சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், கடன் தள்ளுபடி, உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி ஜந்தர்மந்திரில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்தப்போராட்டத்தை ஆதரித்து சென்னையில் விவசாயிகள் இளைஞர்கள் சங்கத்தினர் இன்று போராட்டக்களத்தில் குதித்தனர். விவசாயிகளின் பிரச்னையில்  ஆளுநர் தலையிட கோரி சின்னமலை பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்த இளைஞர்கர்கள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டனர்.
பின்னர் அவர்களை  போலீசார் கைது செய்தனர்.

முடிவுக்கு வந்தது லாரி ஸ்டிரைக்

முடிவுக்கு வந்தது லாரி ஸ்டிரைக்


முடிவுக்கு வந்தது லாரி ஸ்டிரைக்

ஐதராபாத்: கடந்த 10 நாட்களாக நடந்த லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. காப்பீடு பிரிமியம் தொகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 10 நாட்களாக போராட்டம் நடத்தினர். அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஐதராபாத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தை திரும்ப பெற்று கொள்வதாக தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் சண்முகப்பா தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் ஆப்பில் ஆடியோ வெளியிட்ட ரஜினி: ரசிகர்கள் சந்திப்பு ரத்து!

வாட்ஸ் ஆப்பில் ஆடியோ வெளியிட்ட ரஜினி: ரசிகர்கள் சந்திப்பு ரத்து!

வாட்ஸ் ஆப்பில் ஆடியோ வெளியிட்ட ரஜினி: ரசிகர்கள் சந்திப்பு ரத்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏப்ரல் 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை அவரது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள நிகழ்ச்சி ஒன்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த நிகழ்ச்சியை ரஜினிகாந்த் இன்று திடீரென ரத்து செய்துள்ளார்.

இது தொடர்பாக இன்று ரஜினிகாந்த் வாட்ஸ் ஆப் ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். உங்களுக்கு ஒரு தகவல், உங்களை சந்தித்து உங்களுடன் போட்டோ எடுத்து 10 ஆண்டுகளாகிவிட்டது. சரியான வாய்ப்பும், நேரமும் இல்லாததால் அது நடக்காமல் போய்விட்டது.
வருகிற ஏப்ரல் 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது.
சுமார் 1500 முதல் 2000 பேரை சந்தித்து போட்டோ எடுத்து அவர்களுக்கு விருந்து கொடுக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால், தற்போது அந்த சந்திப்பை நடத்த முடியாத சூழல் உள்ளது. ஆகையால் அந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
வரும் காலத்தில் ஒவ்வொரு மாவட்ட ரசிகர்களை தனித்தனியாக சந்தித்து போட்டோ எடுக்க ஏற்பாடு செய்யப்படும், இதுபற்றி விரைவில் அறிவிக்கப்படும். அனைவரும் என்னை புரிந்து கொள்வீர்கள், ஒத்துழைப்பு கொடுப்பீர்கள் என நம்புகிறேன், நன்றி என ரஜினி கூறினார்.

விஷாலுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் கண்டனம்

விஷாலுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் கண்டனம்

விஷாலுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் கண்டனம்

திரைப்படங்களின் ஒவ்வொரு டிக்கெட் கட்டணத்திலும் ஒரு ரூபாய் விவாயிகளுக்கு எனற விஷாலின் அறிவிப்புக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் மற்றும் அவரது அணியினர் வெற்றிப்பெற்றனர். இதையடுத்து தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் பெறுப்பேற்றார். பின், திரைப்படங்களின் ஒவ்வொரு டிக்கெட் கட்டணத்தில் இருந்தும் ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அறிவித்தார்.
விஷாலின் இந்த அறிவிப்புக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் கூறியதாவது:-
விஷாலில் அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
அவர் நடிகர் மற்றும் தாயாரிப்பாளர் சங்கத்தில் மட்டும்தான் பொறுப்பில் உள்ளார். திரையரங்கு குறித்த திட்டங்களை அறிவிக்க அவருக்கு எந்த உரிமையும் இல்லை. வேண்டுமானால் அவர் இலவசமாக விவசாயிகளுக்கு ஒரு படம் நடித்து கொடுக்கலாம். நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் நிர்வாகிகளை கொண்டு உதவி செய்யலாம், என்றார்.
மேலும் 99 சதவீத படங்கள் நஷ்டத்தை மட்டுமே அளிப்பதால், விஷால் இதுபோன்று அனுபவமில்லா முடிவு எடுக்காமல் ஆலோசணைகளை கேட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Tuesday, 4 April 2017
நிர்வாண செல்ஃபியால் வந்த விபரீதம்: வைரலாக பரவும் விழிப்புணர்வு வீடியோ

நிர்வாண செல்ஃபியால் வந்த விபரீதம்: வைரலாக பரவும் விழிப்புணர்வு வீடியோ

நிர்வாண செல்ஃபியால் வந்த விபரீதம்: வைரலாக பரவும் விழிப்புணர்வு வீடியோ

தொழில்நுட்பம் வளர்ச்சி காரணமாக எல்லோர் கையிலும் செல்போனும் இண்டெர்நெட்டும் இலகுவாகிவிட்டது. 
அதிலும் செல்போனில் செல்ஃபி எடுத்து பகிர்வது என்பது சர்வதாரணமான ஒரு செயல்தான் என்றாலும் இதில் சில விபரீதங்களும் நடப்பதை நாம் பார்கிறோம்.

அவ்வாறு ஏற்படும் விபரீதங்களை தவிர்ப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக புரானி தில்லி டாக்கீஸ் குழுவினர் நிர்வாண செல்ஃபி தொடர்பான விழிப்புணர்வு படம் எடுத்துள்ளனர்.  அதில் பெண் ஒருவர் தான் குளியலறையில் இருக்கும் போது செல்ஃபி எடுத்து தனது காதலனுக்கு அனுப்புகிறார். தன் காதலுடன் வற்புறுத்தி கேட்டுக்கொண்டதற்கு இணங்க அனுப்புகிறார். ஆனால் தவறுதலாக தன் அப்பாவிற்கு அனுப்பிவிட பெரும் பிரச்னையாகிவிடுகிறது.

பெண்ணை அழைத்து அட்வைஸ் செய்து பல கதைகள் பேசும் அப்பா, இதை உன் அம்மாவிற்கு அனுப்பினால் தான் இனி நீ சரியாக நடந்து கொள்வாய் என கூறுகிறார். அந்தப்பெண் மன்னிப்பு கேட்டு அனுப்ப வேண்டாம் என்று எவ்வளவு கெஞ்சியும், அதை காதில் வாங்கி கொள்ளாத அவரது அப்பா, தன் மனைவிக்கு அனுப்பிவிடுகிறார்.

Monday, 3 April 2017
பட வாய்ப்புக்காக இதை செய்தார்கள்: பிரபல நடிகையின் குமுறல்!

பட வாய்ப்புக்காக இதை செய்தார்கள்: பிரபல நடிகையின் குமுறல்!


பட வாய்ப்புக்காக இதை செய்தார்கள்: பிரபல நடிகையின் குமுறல்!

style="text-align: justify;">
மலையாள திரையுலகில் தான் போராடிக் கொண்டிருந்தபோது சீனியர் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை பார்வதி மேனன் தெரிவித்துள்ளார். பூ படம் மூலம் கோலிவுட் வந்தவர் கேரளாவை சேர்ந்த நடிகை பார்வதி மேனன்.
இந்த படத்தின் மூலம் தமிழின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.
சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தம வில்லன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் மலையாள தொலைக்காட்சி சேனல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கூறியதாவது,
பட வாய்ப்பு தருவதாக கூறி படுக்கை அறைக்கு மலையாள சினிமாவில் சீனியர் நடிகர்கள், இயக்குனர்கள் வெளிப்படையாகவே என்னை அழைத்தார்கள்.
வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் ஆட்கள் சினிமா துறையில் உள்ளனர். அதுவும் படுக்கைக்கு அழைப்பது அவர்களின் உரிமை போன்று அழைத்தார்கள்.

ஐயோ... கான்ஜ்சூரிங்... பயத்தில் அலறிய சிவகார்த்திகேயன்

ஐயோ... கான்ஜ்சூரிங்... பயத்தில் அலறிய சிவகார்த்திகேயன்


ஐயோ... கான்ஜ்சூரிங்... பயத்தில் அலறிய சிவகார்த்திகேயன்

சென்னை: ஐயோ... கான்ஜ்சூரிங்... கான்ஜ்சூரிங் என்று சிவகார்த்திகேயனே அலறிய சம்பவம் நடந்துள்ளது.

விஜய் டிவியில் அன்புடன் டிடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார் திவ்யதர்ஷினி. இதில் முதல் விஐபியாக சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தபோது கட்டத்தில் பேய் போல வந்து ஒருவர் பயமுறுத்த சிவா அலறியே விட்டார்.

பின்னர் சுதாரித்துக் கொண்டு வழக்கம் போல தனது பாணியில் அட கான்ஜ்சூரிங்... என சொன்னது அனைவரையும் சிரிக்கவைத்தது

அழைத்து செல்வேன்... பாலிவுட்டுக்கு... தயாரிப்பாளர் சபதம்

அழைத்து செல்வேன்... பாலிவுட்டுக்கு... தயாரிப்பாளர் சபதம்


அழைத்து செல்வேன்... பாலிவுட்டுக்கு... தயாரிப்பாளர் சபதம்

சென்னை: அழைத்துச் செல்வேன்... எப்படியாவது அவரை பாலிவுட்டுக்கு அழைத்துச் செல்வேன் என்று சபதம் போடாத குறையாக தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் ஒருவர். யாரை தெரியுமா என்று கேட்கிறார் லைட்பாய் லட்சுமணன்.

நயன்தாரா சோலோ ஹீரோயினாக கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான டோரா ரசிகர்களிடம் செம வரவேற்பை பெற்றுள்ளது.

இவர் அடுத்து யுவன் மற்றும் பாலிவுட் தயாரிப்பாளர் வாசு பக்னானி இணைந்து தயாரிக்கும் கொலையுதிர் காலம் படத்தில் நடித்து வருகிறார்.

தயாரிப்பாளர் வாசுபக்னானி கூறுகையில், 'தமிழில் எனக்கு மிகவும் பிடித்த நடிகை நயன்தாரா. கொலையுதிர் காலம் நாங்கள் தமிழில் தயாரிக்கும் முதல் படம்.
அவரை எப்படியாவது பாலிவுட்டிற்கு அழைத்து செல்வேன்' என்று தெரிவித்துள்ளார்.

Sunday, 2 April 2017
லட்சுமி" யை தேடும் தினகரன் ஆதரவாளர்கள்!

லட்சுமி" யை தேடும் தினகரன் ஆதரவாளர்கள்!





ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரன், முதல்வர், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என யாரையும் நம்புவதில்லை.
தமது தனிப்பட்ட ஆதரவாளர்கள், மற்றும் வாரி இறைக்கப்படும் பணத்தை மட்டுமே நம்பி களத்தில் குதித்துள்ளார்.
மேலும், துணை பொது செயலாளராக பொறுப்பேற்ற பிறகு, டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட தளவாய் சுந்தரம் மேற்பார்வையில்தான் பிரச்சார பணிகள் நடைபெற்று வருகின்றன.
அவரையும் தாண்டி "லட்சுமி" என்று அழைக்கப்படும் லட்சுமிபதிதான், தினகரனுக்கான அனைத்துமாக செயல்பட்டு வருகிறார்.
ஆதரவாளர்கள், தங்களுக்கு எது வேண்டுமானாலும், அதை தளவாய் சுந்தரத்திடம் கேட்க வேண்டும்.
அவர் அதை லட்சுமியிடம் சொல்வார், லட்சுமி, அவசியம் என்றால் அதை தினகரனிடம் சொல்வார்.
இவ்வாறு மூன்றடுக்கு அதிகார அமைப்புடன்தான், ஆர்.கே.நகரில் தினகரனில் தேர்தல் பிரச்சாரம், அவராலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ க்கள், அமைச்சர்கள் கூட, தளவாய் சுந்தரம் மூலம்தான் லட்சுமியை அணுக முடியும். அதனால், அவர்கள் எதுவாக இருந்தாலும், முதல்வரிடம் கேட்டுக் கொள்கின்றனர்.
இதை அறிந்து, அவர்கள் எல்லாம் என்ன முதல்வர் அணியா? என்றும் தினகரன் கோபப்பட்டுள்ளார்.
எனவே, தினகரனின் நிழலாக இருந்து அனைவரையும் ஆட்டிப்படைக்கும் லட்சுமி, லட்சுமி என்றே ஓடுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
காதலியை சுத்தியால் அடித்துக் கொன்ற காதலன்... பிறந்தநாள் பரிசு தருவதாகக் கூறி வெறிச்செயல்

காதலியை சுத்தியால் அடித்துக் கொன்ற காதலன்... பிறந்தநாள் பரிசு தருவதாகக் கூறி வெறிச்செயல்



காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் காதலியை சுத்தியால் அடித்து கொலை செய்து விட்டு காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி  உள்ளது.
சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெனிபர் புஷ்பா(20) செம்மஞ்சேரியைச் சேர்ந்தவர் ஜான்மேத்யூ(22) இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஜான் மேத்யூ டைலராக பணி புரிந்து வருகிறார். கல்லூரி படிப்பை முடித்த ஜெனிபருக்கு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணி கிடைத்துள்ளது.
இதற்கிடையே டெய்லர் வேலை செய்யும் ஜான் மேத்யூவை காதலிக்கக் கூடாது என்று ஜெனிபரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே எங்கே காதலி தனக்கு கிடைக்காமல் போய் விடுவாரோ என்ற கோணத்தில்  சிந்தித்த  ஜான் மேத்யூ ஜெனிபரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்.



அதன்படி இருவரும் பைக்கில் மாமல்லபுரம் சென்று சுற்றிப் பார்த்தனர். மாலை ஆனதும் புலிக்குகை என்ற பகுதிக்கு ஜெனிபரை அழைத்துச் சென்ற ஜான் அவருக்கு பிறந்தநாள் பரிசு கொடுப்பது போல பெட்டி ஒன்றை திறந்தார். அதில் பரிசு பொருள் இருப்பதற்கு பதிலாக சுத்தி இருந்ததைக் கண்டு அதிர்ந்து போனார் ஜெனிபர்.
சுதாகரிப்பதற்குள் பல முறை சுத்தியைக் கொண்டு தனது காதலியை ஜான் கடுமையாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 


ஜெனிபர் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்த பின்னர் அவர் அணிந்திருந்த துப்பட்டாவைக் கொண்டே அங்கிருந்த மரத்தில் ஜான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்


இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை:
இன்று தமிழகம் முழுவதும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடைபெற இருக்கின்றன.
நாடு முழுவதும், ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ நோய் வராமல் தடுப்பதற்காக, சொட்டு மருந்து அளிக்கும் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுதும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டு, சொட்டு மருந்து அளிக்கப்பட இருக்கின்றன.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் முதல் தவணை இன்றும், இரண்டாம் தவணை 30-ந்தேதியும் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் 43,051 மையங்களில் சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இன்று நடைபெற உள்ள போலியோ சொட்டு மருந்து முகாமில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுகிறார்கள். பெற்றோர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" - இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்


தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழகம் முழுவதும் இன்று 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 6 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வழக்கப்படும் இம்முகாமிற்கென 1624 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 
அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையம், பஸ் நிலையம், ரயில்நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இம்முகாம்கள் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்துகள் போடப்படுகிறது.

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates