Advertisements

Tuesday, 21 March 2017

ஸ்மார்ட்போன்களை கட்டுப்படுத்தும் டாட்டூ......

ஸ்மார்ட்போன்களை கட்டுப்படுத்தும் டாட்டூ......

ஸ்மார்ட்போன்களைக் கட்டுப்படுத்தும் புதிய வகை எலெக்ட்ரானிக் டாட்டூக்களை, ஜெர்மனியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

ஸ்கின் மார்க்ஸ்:

பெர்லினில் உள்ள சார்லேண்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ள இந்த இ-டாட்டூவினை தோலின் மேல் ஒட்டிக் கொள்ளலாம். தலைமுடியை விட மெல்லியதாக வடிவமைக்கப்பட்ட இந்த இ-டாட்டூவுக்கு ஸ்கின் மார்க்ஸ் (Skin Marks) என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த டாட்டூவினை ஸ்மார்ட்போனில் இணைத்து, ஒலி அளவைக் கூட்டி, குறைப்பது மற்றும் பாடல்களை ப்ளே மற்றும் பாஸ் செய்வது உள்ளிட்டவைகளை செய்ய முடியும். இதேபோன்று ஸ்மார்ட்போன்களின் மற்ற இயக்கங்களையும் இதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates