Advertisements

breaking news

Breaking News
Loading...

Total Pageviews

New Post

Rss

Friday, 31 March 2017
ро╡ро┐рогрпНрогрокрпНрокро┐родрпНродрпБро╡ро┐роЯрпНроЯрпАро░рпНроХро│ро╛..? ро▓роЯрпНроЪрпБрооро┐ ро╡ро┐ро▓ро╛ро╕рпН ро╡роЩрпНроХро┐ропро┐ро▓рпН роЕродро┐роХро╛ро░ро┐ рокрогро┐

ро╡ிрог்рогрок்рокிрод்родுро╡ிроЯ்роЯீро░்роХро│ா..? ро▓роЯ்роЪுрооி ро╡ிро▓ாро╕் ро╡роЩ்роХிропிро▓் роЕродிроХாро░ி рокрогி

விண்ணப்பித்துவிட்டீர்களா..? லட்சுமி விலாஸ் வங்கியில் அதிகாரி பணி

லட்சுமி விலாஸ் வங்கியில் புரபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்குக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேறக்கப்படுகின்றனர்.
பணி: புரபேஷனரி அதிகாரி
தகுதி:
60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
20 - 30க்குள் இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை
: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையம:
சென்னை, கோயம்புத்தூர், சேலம், மதுரை, கரூர்
விண்ணப்பக்கட்டணம்: ரூ.
650
விண்ணப்பிக்கும் முறை:
http://careers.lvbank.com என்ற இணைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
17.04.2017
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி :
மே மாதம் நடைபெறலாம்
மேலும் முழுமையான விபரங்கள் அறிய
http://careers.lvbank.com/docs/PO-Notification.pdf
என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

роР.роЯро┐.роР., рокроЯро┐родрпНродро╡ро░ро╛ роирпАроЩрпНроХ? роЕро░роЪрпБ рокрогро┐роХрпНроХрпБ роУро░рпН роЕро░ро┐роп ро╡ро╛ропрпНрокрпНрокрпБ!!

роР.роЯி.роР., рокроЯிрод்родро╡ро░ா роиீроЩ்роХ? роЕро░роЪு рокрогிроХ்роХு роУро░் роЕро░ிроп ро╡ாроп்рок்рокு!!

ஐ.டி.ஐ., படித்தவரா நீங்க? அரசு பணிக்கு ஓர் அரிய வாய்ப்பு!!

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் பெரும்பாலும் எச்.ஏ.எல்., என்ற பெயராலேயே அறியப்படுகிறது. கர்நாடகாவின் பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது. ஏரோனாடிக்ஸ் பிரிவில் பிரபலமானது.

இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் டிரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கான அழைப்பினை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பணி நியமனமாகவும் இந்த நியமனம் செய்யப்பட உள்ளது.

காலியிட விபரம்: இந்த நிறுவனத்தின் டெக்னீசியன் டிரெய்னி பதவியில் சானல் சி பிரிவில் 1 இடமும், சானல் பி பிரிவில் 3 இடங்களும் காலியாக உள்ளன.

வயது: விண்ணப்பதாரர்கள் 38 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி., பிரிவினராக இருந்தால் 43 வயதுக்குள்ளும், ஓ.பி.சி., பிரிவினராக இருந்தால் 41 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: சானல் சி மற்றும் பி பிரிவிலான டெக்னீசியன் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு முழு நேரப் படிப்பாக என்.சி.டி., அல்லது என்.சி.வி.டி., படிப்பை டர்னர், கிரைண்டர், மெஷினிஸ்ட், பிட்டர் அல்லது பெயிண்டர் பிரிவில் முடித்திருக்க வேண்டும். பட்டப் படிப்பு முடித்தவர்களும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்க முடியும். முழுமையான விபரங்களை இணையதளத்தைப் பார்த்து
அறியவும்.

தேர்ச்சி முறை: முதல் நிலை ஸ்கிரீனிங் தேர்வு அதன் பின்னர் எழுத்துத் தேர்வு போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்க: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி,உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Chief Manager (HR) Recruitment Section, HR Department Hindustan Aeronautics Limited Corporate Office, 15/1 Cubbon Road Bangalore - 560 001.
கடைசி நாள் : 2017 ஏப்., 28.

விபரங்களுக்கு: www.hal-india.com/

рокро╛роХрпБрокро▓ро┐ 2 рокроЯрпНроЬрпЖроЯрпН роЕродро┐роХрооро╛ройродрпБроХрпНроХрпБ роХро╛ро░рогроорпН роЗро╡ро░ро╛?

рокாроХுрокро▓ி 2 рокроЯ்роЬெроЯ் роЕродிроХрооாройродுроХ்роХு роХாро░рогроо் роЗро╡ро░ா?

பாகுபலி 2 பட்ஜெட் அதிகமானதுக்கு காரணம் இவரா?

உலக அளவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் பாகுபலி. ஏப்ரல் மாதம் பாகுபலியின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள பாகுபலி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் வசூல் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அனுஷ்காவை வைத்து பாகுபலி முதல் பாகம் படமாக்கப்பட்ட போதே, அவருடைய இரண்டாம் பாகத்தின் சில காட்சிகளையும் இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி படமாக்கியிருந்தார். ஆனால் இரண்டாம் பாகத்திற்கும், இதற்கும் பெரிய வித்தியாசம் இருந்துள்ளது.
இதனால் முதல் பாகத்தின் போது அனுஷ்காவை வைத்து எடுத்த காட்சிகள் மீண்டும் படமாக்கியுள்ளார் ராஜமௌலி.
இதனால் படத்தின் பட்ஜெட், கிராபிக்ஸ் வேலை என்று 20 கோடி ரூபாய் அளவிற்கு பட்ஜெட் அதிகமாகியுள்ளது.

2017-ро▓рпН родро│рокродро┐ роЖроЯрпНроЪро┐. ро╡ро┐роЬропрпН ро░роЪро┐роХро░рпНроХро│ро┐ройрпН ро░роХроЪро┐роп роХрпВроЯрпНроЯроорпН

2017-ро▓் родро│рокродி роЖроЯ்роЪி. ро╡ிроЬроп் ро░роЪிроХро░்роХро│ிрой் ро░роХроЪிроп роХூроЯ்роЯроо்

2017-ல் தளபதி ஆட்சி. விஜய் ரசிகர்களின் ரகசிய கூட்டம்

இளையதளபதி விஜய் அரசியலுக்கு வரமாட்டார் என்று கூறிய அவரது தந்தை எஸ்.ஏ.சி, பின்னர் திடீரென அந்த கருத்தை மாற்றி அரசியலுக்கு வருவதும் வராததும் விஜய்யின் விருப்பம் என்று கூறினார்.

உண்மையில் விஜய் ரசிகர்களின் நாடித்துடிப்பை அறியவே எஸ்.ஏ.சி அந்த அறிக்கையை வெளியிட்டதாகவும், எதிர்பார்த்ததுபோலவே விஜய் ரசிகர்கள் எஸ்.ஏ.சியின் கருத்தால் ஆதங்கப்பட இதுதான் சமயம் என விஜய் அரசியலில் காலடி எடுத்து வைக்க முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

இப்போது இருக்கும் ஒரே குழப்பம், தனிக்கட்சியா அல்லது பாஜகவிடம் இணைவதா? என்பது தானாம். இதற்காக விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ரகசிய கூட்டம் போட்டு ஆலோசனை செய்து வருவதாகவும், ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க மேற்கண்ட இரண்டில் ஒரு முடிவை விஜய் எடுக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது

தமிழகம் முழுவதிலும் உள்ள விஜய் ரசிகர்கள் 2021ல் தளபதி ஆட்சிதான் என்று தகவலை பரப்பி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

роиропройрпНродро╛ро░ро╛ роироЯро┐родрпНрод роХрпКро▓рпИропрпБродро┐ро░рпНроХро╛ро▓родрпНродрпИ родропро╛ро░ро┐роХрпНроХрпБроорпН роЗроирпНродро┐рокрпНрокроЯ роиро┐ро▒рпБро╡ройроорпН!

роиропрой்родாро░ா роироЯிрод்род роХொро▓ைропுродிро░்роХாро▓род்родை родропாро░ிроХ்роХுроо் роЗрои்родிрок்рокроЯ роиிро▒ுро╡ройроо்!

நயன்தாரா நடித்த கொலையுதிர்காலத்தை தயாரிக்கும் இந்திப்பட நிறுவனம்!

நயன்தாரா நடிப்பில் கொலையுதிர்காலம் என்ற படத்தை இயக்கி வருகிறார் சக்ரி டோல்டி. இதன் இந்தி ரீமேக்கில் தமன்னா நாயகியாக நடிக்கிறார். 23 ஆண்டுகளாக தயாரிப்பு துறையில் உள்ள பூஜா எண்டர்டைன்மெண்ட் அண்ட் பிலிம் லிமிடெட் நிறுவனம் கொலையுதிர்காலம் மூலம் தென்னிந்தியாவில் கால் பதிக்கிறது. இந்நிறுவனம் இந்தி, மராத்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளில் இதுவரை 31 படங்கள் தயாரித்துள்ளது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான் உள்பட பாலிவுட்டின் முன்னணி நடிகர்களை வைத்து படங்கள் தயாரித்துள்ள இந்நிறுவனம், முதன்முறையாக நயன்தாரா நடிக்கும்கொலையுதிர்காலம் படத்தால் எண்ட்ரி கொடுத்துள்ளது.
இதையடுத்து தமிழ், மலையாளத்திலும் தொடர்ந்து படங்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

роЗройрпНро▒рпБ роорпБродро▓рпН ро╕рпНрооро╛ро░рпНроЯрпН ро░рпЗро╖ройрпН роХро╛ро░рпНроЯрпБ ро╡ро┐ройро┐ропрпЛроХроорпН - роЗройро┐ роЙро│рпНродро╛ро│рпБроХрпНроХрпБ ро╡рпЗро▓рпИ роЗро▓рпНро▓рпИ

роЗрой்ро▒ு рооுродро▓் ро╕்рооாро░்роЯ் ро░ேро╖рой் роХாро░்роЯு ро╡ிройிропோроХроо் - роЗройி роЙро│்родாро│ுроХ்роХு ро╡ேро▓ை роЗро▓்ро▓ை


இன்று முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வினியோகம் - இனி உள்தாளுக்கு வேலை இல்லை

பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக அரசு சார்பில், ரேஷன் கார்டு (குடும்ப அட்டை) அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ரேஷன் கார்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 2005ம் ஆண்டு அனைவருக்கும் ரேஷன் கார்டுகளில் உள்தாள் மட்டும் ஒட்டப்பட்டு வழங்கப்படுகிறது. இதுபோல் 8 ஆண்டுகளுக்கு பிறகு, ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, இன்று முதல் வினியோகிக்கப்படுகிறது.
இதையொட்டி திருவள்ளூர் மாவட்டம், கொரட்டூரில், முதல்வர் பழனிசாமி ஸ்மார்ட் கார்டு வழங்கி துவங்கி வைக்கிறார். ஒரு மாவட்டத்தில், தலா 50 ஆயிரம் ஸ்மார்ட் கார்டுகள் என மாநிலம் முழுவதும் 15 லட்சம் கார்டுகள் வினியோகம் செய்யப்பட உள்ளன.
இதில் சென்னைக்கு மட்டும் ஏப்ரல் 15ம் தேதிக்கு பிறகு, ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உணவு பொருள் வட்ட வழங்கல் துறை அதிகாரிகளை கேட்டபோது, ஆர்கே நகர் தொகுதியில் இடைத் தேர்தல் நடப்பதால், சென்னைக்கு மட்டும் ஏப்ரல் 15ம் தேதிக்கு மேல் வினியோகம் செய்யப்படும் என்றார்.

роЪро╛ропрпНройро╛ро╡рпИ ро╡рпАро┤рпНродрпНродро┐ роЕро░рпИропро┐ро▒рпБродро┐ропро┐ро▓рпН роХро╛ро▓рпН рокродро┐родрпНродро╛ро░рпН роЪро┐роирпНродрпБ.

роЪாроп்ройாро╡ை ро╡ீро┤்род்родி роЕро░ைропிро▒ுродிропிро▓் роХாро▓் рокродிрод்родாро░் роЪிрои்родு.

சாய்னாவை வீழ்த்தி அரையிறுதியில் கால் பதித்தார் சிந்து.

இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் காலிறுதியில் சாய்னாவை வீழ்த்தி அரையிறுதியில் கால் பதித்துள்ளார் பி.வி.சிந்து.
இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற காலிறுதி நடந்தது. விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் சிந்துவும், நேவாலும் கடுமையான வெற்றிக்காக போராடினர்.
இறுதியில் சிந்து 21-16, 22-20 என்ற நேர் செட்களில் சாய்னா நெவாலை வீழ்த்தினார்.
சிந்துவும், சாய்னாவும் இதுவரை இரு முறை மட்டுமே சர்வதேசப் போட்டிகளில் மோதியுள்ளனர். அதில் 2014-ல் நடைபெற்ற சையது மோதி பாட்மிண்டன் போட்டியில் சாய்னா, சிந்துவை வீழ்த்தினார்.
மூன்று வருடங்கள் கழித்து சிந்து அதற்கு சமன் செய்துள்ளார்.
வெற்றி குறித்துப் சிந்து பேசியது: "மொத்தத்தில் இது நல்லதொரு ஆட்டம். ஆரம்பத்தில் சாய்னா முன்னிலையில் இருந்தார். எப்போதுமே பின்னடைவில் இருந்தாலும், அதிலிருந்து மீள முடியும் என்ற தன்னம்பிக்கை எனக்குள் இருக்கிறது. அதனால் நான் விடாப்பிடியாக ஆடினேன். ஒரு கட்டத்தில் சாய்னா 20-19 என்ற கணக்கில் முன்னிலை இருந்தார். அப்போதும்கூட இந்த ஆட்டத்தில் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது' என்று வெற்றி களிப்பில் பேசினார்.
மற்றொரு காலிறுதியில், தென் கொரியாவின் ஜி ஹியூன் 21-16, 22-20 என்ற நேர் செட்களில் நடப்பு சாம்பியனான தாய்லாந்தின் ரட்சனோக் இந்தனனை தோற்கடித்தார்.
சிந்து தனது அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் சங் ஜி ஹியூனை சந்திக்கிறார். இந்தப் போட்டியில் இருவரும் டஃப் கொடுப்பர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

роЕродро┐ро░роЯро┐ роЪро░ро╡рпЖроЯро┐ роЖрокро░рпН..! роТро░рпБ роиро╛ро│рпИроХрпНроХрпБ 10 GB...роХро│родрпНродро┐ро▓рпН роЗро▒роЩрпНроХро┐ропродрпБ BSNL...!

роЕродிро░роЯி роЪро░ро╡ெроЯி роЖрокро░்..! роТро░ு роиாро│ைроХ்роХு 10 GB...роХро│род்родிро▓் роЗро▒роЩ்роХிропродு BSNL...!

அதிரடி சரவெடி ஆபர்..! ஒரு நாளைக்கு 10 GB...களத்தில் இறங்கியது BSNL...!

ஜியோ இலவச  சேவை வழங்க  தொடங்கியவுடன் மற்ற  பல  தொலைதொடர்பு நிறுவனங்களும்  போட்டியை சமாளிக்க  பல புதிய  சலுகையை  அறிவித்தது .
இந்நிலையில் ஜியோவின் சலுகைக்கு  எதிராக , வாடிக்கையாளர்களை  தன்   பக்கம்  ஈர்க்கும்  தருவாயில்  பிஎஸ்என்எல்  நிறுவனம்  வெறும் ரூ .249  மாதாதிந்திர  கட்டணத்தில்  தினமும் 1௦ ஜிபி வழங்க திட்டமிட்டுள்ளது  பி எஸ் என் எல் நிறுவனம் .
இதன் மூலம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் அதிக உற்சாகத்தில் உள்ளனர். மேலும்  இந்த அறிவிப்பிற்கு பின், அதிக  அளவில் வாடிக்கையாளர்கள்  பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களாக  மாறி உள்ளனர்  என நிறுவன இயக்குனர்  என்.கே.குப்தா  தெரிவித்துள்ளார் .
ஜியோ இலவச  சேவை  முடியும்  தருவாயில்,  பிஎஸ்என்எல் இன் இந்த திட்டம் மக்களிடேயே  நல்ல  வரவேற்பை  பெற்றுள்ளது  என்பது  குறிப்பிடத்தக்கது .

роХрпЛро▓ро┐ропрпИ ро╕рпНроЯроорпНрокрпИ рокро┐роЯрпБроЩрпНроХро┐ роХрпБродрпНродро┐ роЪро╛ропрпНродрпНродро┐ро░рпБрокрпНрокрпЗройрпН - роХрпКро▓рпИ ро╡рпЖро▒ро┐ропро┐ро▓рпН роОроЯрпН роХрпЛро╡ройрпН

роХோро▓ிропை ро╕்роЯроо்рокை рокிроЯுроЩ்роХி роХுрод்родி роЪாроп்род்родிро░ுрок்рокேрой் - роХொро▓ை ро╡ெро▒ிропிро▓் роОроЯ் роХோро╡рой்


கோலியை ஸ்டம்பை பிடுங்கி குத்தி சாய்த்திருப்பேன் - கொலை வெறியில் எட் கோவன்

தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் மோசமான வார்த்தையை பேசிய கோலியை, ஸ்டம்பை பிடுங்கி குத்தி சாய்த்து விடலாம் என்று யோசித்தேன் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எட் கோவன் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எட் கோவன். 34 வயதான இவர் இந்தியாவுடன் 2011–12, 2013–ஆம் ஆண்டு டெஸ்ட் தொடர்களில் விளையாடினார்.
அவர், நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்று அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியது:
“அது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டிருந்த நேரம் எனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அந்த நேரத்தில் தேவையில்லாத மோசமான வார்த்தையை வீராட் கோலி என்னைப் பார்த்துக் கூறினார்.
அவரின் அந்த வார்த்தை எனக்கு கடும் கோபத்தை ஏற்பட்டது.
பின்னர், நடுவர், ‘நீங்கள் வரம்பு மீறுகிறீர்கள்’ என்று கோலியை எச்சரித்தப் பிறகே அதன் தன்மையை கோலி உணர்ந்தார். பிறகு என்னிடம் மன்னிப்பும் கேட்டார்.
ஆனாலும், அந்த நேரத்தில் கோலி அவ்வாறு சொன்னபோது உணர்ச்சி வேகத்தில், ஸ்டம்பை பிடுங்கி அவரை குத்தி சாய்த்து விடலாம் என்பது போல் தோன்றியது” என்று அந்தப் பேட்டியில் அவர் கூறினார்.

роЖрогрпБро▒рпБрокрпНрокрпБ рокрпКро░рпБродрпНродрокрпНрокроЯрпНроЯ рокрпБродро┐роп роЗро░рпБроХрпНроХрпИ ....ро░ропро┐ро▓рпНроХро│ро┐ро▓рпН роЕро▒ро┐роорпБроХроорпН ...

роЖрогுро▒ுрок்рокு рокொро░ுрод்родрок்рокроЯ்роЯ рокுродிроп роЗро░ுроХ்роХை ....ро░ропிро▓்роХро│ிро▓் роЕро▒ிрооுроХроо் ...


ஆணுறுப்பு பொருத்தப்பட்ட புதிய இருக்கை ....ரயில்களில் அறிமுகம் ...

மெட்ரோ  ரயிலில்  ஆணுறுப்பு  போன்ற அமைப்பு  கொண்ட  இருக்கையை  அறிமுகம் செய்யப் பட்டுள்ளது .
அதாவது மெக்சிகோ  நகரில்  பொதுவாகவே   மெட்ரோ ரயில்கள்  அதிகம் பயன்படுத்தப் பட்டு வருகிறது.  அதே வேளையில் உலக  அளவில் பெண்கள் மீதான  பாலியல்  வன்கொடுமை  நடந்துக் கொண்டே தான் இருக்கிறது .
அதிலும் குறிப்பாக மெக்சிகோ நகரில் , பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு  எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் ,  மக்களிடேயே  ஒரு நல்ல  விழிப்புணர்வை  ஏற்படுத்தும்  வகையிலும் , ,மார்பகங்கள், இடுப்பு,  கை கால்கள்  இவை  அனைத்தும் உள்ளது போன்றஒரு  இருக்கையை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த  இருக்கையில்  யாரும் அமர விரும்ப மாட்டார்கள் .
மாறாக அந்த  இருக்கையின்  மூலம்  சொல்ல  வரும் கருத்தை மட்டும்  மனதில் நினைத்துக்கொண்டு  சக  பயணிகள்  பயணம்  செய்கின்றனர்.
மாற்றம்  தேவைதான் ..அதிலும்  குறிப்பாக  இது போன்ற மாற்றம்  இருந்தால் தான்  மனித  மனம்   திருந்தும் என்றால் , இதையும்  வரவேற்கலாம் .

70 рооро╛рогро╡ро┐роХро│рпН роиро┐ро░рпНро╡ро╛рогрокрпНрокроЯрпБродрпНродрокрпНрокроЯрпНроЯ роХрпКроЯрпБроорпИ!

70 рооாрогро╡ிроХро│் роиிро░்ро╡ாрогрок்рокроЯுрод்родрок்рокроЯ்роЯ роХொроЯுрооை!

70 மாணவிகள் நிர்வாணப்படுத்தப்பட்ட கொடுமை!

லக்னோ:
மாணவிகளை நிர்வாணப்படுத்தி மாதவிடாய் சோதனை நடத்திய சம்பவம் உ.பியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் முஜாஃபர் நகர் மாவட்டத்தில், கதெளலி என்ற இடத்தில், மாணவிகள் தங்கிப் படிக்கும் கஸ்தூரிபாய் உறைவிடப்பள்ளி உள்ளது. கடந்த 29ம் தேதி, பள்ளிக்கு அருகே மாதவிடாய் காலத்துல் பயன்படுத்தப்பட்ட நாப்கின்கள் சில வீசி எறியப்பட்டிருந்தன.
யார் இப்படி வீசியது என்பது குறித்து மாணவிகளிடையே சர்ச்சை ஏற்பட்டது. அப்போது விடுதி கண்காணிப்பாளரான சுரேகா தோமர் என்ற பெண்மணி, அங்கிருக்கும் எழுபது மாணவியரையும் வரிசையாக நிற்கவைத்து, நிர்வாணப்படுத்தி மாதவிடாய் சோதனை நடத்தியிருக்கிறார்.
மாணவிகள் சிலர் இதை தங்கள் பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளனர். இதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சம்பவம் உண்மை என்று தெரியவந்ததை அடுத்து விடுதி கண்காணிப்பாளர் சுரேகா தோமரை இடைநீக்கம் செய்யப்பட்டார்.
கதெளலி பகுதி காவல்துறை அதிகாரியான எஸ்.சி.குப்த், ""மாணவிகளை நிர்வாணப்படுத்தி, சோதனையிட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தவுடனே, நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தோம். மேலும் இது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உறைவிடப் பள்ளிகளின் கூட்டமைப்பை கேட்டுக்கொண்டோம்"என்று தெரிவித்தார்.
இதற்கிடையே பணி நீக்கம் செய்யப்பட்ட விடுதிக் கண்காணிப்பாளர் சுரேகா தோமர், சக ஆசிரியைகளின் சசித்திட்டத்தால் தான் சிக்கவைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

роЗро▓ро╡роЪ роЪрпЗро╡рпИ' 15 роиро╛ро│рпН роирпАроЯрпНроЯро┐рокрпНрокрпБ! роорпЗро▓рпБроорпН 3рооро╛родроорпН роЪро▓рпБроХрпИ. роЬро┐ропрпЛ роЕродро┐ро░роЯро┐

роЗро▓ро╡роЪ роЪேро╡ை' 15 роиாро│் роиீроЯ்роЯிрок்рокு! рооேро▓ுроо் 3рооாродроо் роЪро▓ுроХை. роЬிропோ роЕродிро░роЯி

இலவச சேவை' 15 நாள் நீட்டிப்பு! மேலும் 3மாதம் சலுகை. ஜியோ அதிரடி

டில்லி,
ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் அறிவித்துள்ளது. தற்போது வழங்கி வரும் இலவச சேவையை மேலும் 15 நாட்கள் நீட்டித்துள்ளது.
ஜியோவின் பிரைம் மெம்பர்ஷிப்பில் சேராத வாடிக்கையாளர்கள் இந்த 15 நாட்களுக்குள் தங்களை உறுப்பினராக்கி கொள்ளவும், அவ்வாறு உறுப்பினர்களானவர்களுக்கு 303 ரூபாய்க்கு 3 மாதம் சேவை கிடைக்கும் என்றும் அதிரடி அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை நேற்று இரவு ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே, பிரைம் மெம்பர்சிப் பிளான் நேற்றுடன் (மார்ச் 31) முடிவடைவதாக இருந்தது. தற்போது இது ஏப்ரல் 15ந்தேதி வரை மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் முகேஷ் அம்பானி ஜியோவை அறிவித்தது முதல் மார்ச் 31 வரை வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டோ இலவசமாகவே வழங்கப்பட்டு வந்தது.
இதன் காரணமாக சுமார் 10 கோடி பேர் ஜியோவின் வாடிக்கையாளர்களாக மாறினார்கள்.
இந்நிலையில், ஏப்ரல் 1 முதல் 99 ரூபாய் செலுத்தி பிரைம் மெம்பர்ஷிப் ஆக வேண்டும் என்றும், அதன்பிறகு மாதந்தோறும் 303 செலுத்தி தினசரி 1 ஜிபி வீதம் 30 ஜிபி டேட்டா வழங்குவதாகவும் அறிவித்திருந்தது.
ஆனால், வாடிக்கையாளர்கள் ஜியோவில் தொடர விருப்பம் காட்டவில்லை. மேலும் பல இடங்களில் ஜியோவின் சிக்னல் குறைபாடு மற்றும், மாதம் 303 கட்ட வேண்டும் என்று ஜியோ அறிவித்தது காரணமாக வாடிக்கையாளர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.
ஜியோவின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு இல்லாததாலும், மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் ஜியோவுக்கு போட்டியாக சலுகைகள் அறிவித்து வருவதாலும், ஜியோவின் வாடிக்கையாளர்கள் சுமார் 25 சதவிகிதத்தினர் மட்டுமே பிரைம் மெம்பர்ஷிப்பில் இணைந்தனர்.
இதன் காரணமாக அதிர்ச்சி அடைந் ஜியோ நிர்வாகம், தற்போது பிரைம் மெம்பர்ஷிப்பில் சேர மேலும் 15நாள் அவகாசமும், அவ்வாறு உறுப்பினர்களாக பதிவு செய்பவர்களுக்கு 303 ரூபாய்க்கு 3 மாதம் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும் அறிவித்து உள்ளது.
ஜியோவின் நெட்வொர்க் பிரச்சினைகளை ஒப்புக்கொண்ட அம்பானி, ஜியோவின் நெட்வொர்க் சேவை மேலும் விரிவாக்கப்படும் என்றும் தொடர்ந்து வரும் வாரங்களில் சேவை தரம் வியத்தகு முன்னேற்றம் ஏற்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
தற்போது நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் அளவிலான ஜியோ தொலைதொடர்பு கோபுரங்கள் மூலம் 4ஜி, பிராட்பேன்ட் சேவைகளை வழங்கி வருகிறது. இத்துடன் மேலும் 1 லட்சம் கோபுரங்கள் நாடு முழுவதும் நிறுவ ஜியோ முடிவெடுத்துள்ளது என்றும் இன்னும் ஒருசில மாதங்களில் இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிடும் என்றும் கூறியுள்ளது.
இதற்காக மேலும் ரூ 200,000 கோடி முதலீடு செய்வதாகவும், இந்த பச்சைப்புல்வெளி முதலீடு உலகின் மிகப்பெரியது என்றும் அம்பானி, கூறி உள்ளார்.

роЗроЩрпНроХрпЗ роЙройроХрпНроХрпЖройрпНрой ро╡рпЗро▓рпИ? роЪрпЖро░рпБрокрпНрокрпБ, роХро▒рпНроХро│рпИ ро╡рпАроЪро┐ роЪро┐.роЖро░рпН.роЪро░ро╕рпНро╡родро┐ропрпИ родрпБро░родрпНродро┐ропроЯро┐родрпНрод роЖро░рпН.роХрпЗ.роироХро░рпН рокрпКродрпБ роороХрпНроХро│рпН

роЗроЩ்роХே роЙройроХ்роХெрой்рой ро╡ேро▓ை? роЪெро░ுрок்рокு, роХро▒்роХро│ை ро╡ீроЪி роЪி.роЖро░்.роЪро░ро╕்ро╡родிропை родுро░род்родிропроЯிрод்род роЖро░்.роХே.роироХро░் рокொродு роороХ்роХро│்


இங்கே உனக்கென்ன வேலை? செருப்பு, கற்களை வீசி சி.ஆர்.சரஸ்வதியை துரத்தியடித்த ஆர்.கே.நகர் பொது மக்கள்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது சசிகலா அணியைச் சி.ஆர்.சரஸ்வதி வேன் மீது செருப்பு, கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து போலீசார் அவரை பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர்
சென்னை ஆர்.கே.நகர் நேதாஜி நகரில் உள்ள பர்மா ஜூம்மா தமிழ் முஸ்லிம்கள் பள்ளிவாசல் பகுதியில் ஓபிஎஸ் அணியின் சார்பில் பிரச்சார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் அங்கு டி.டி.வி.தினகரன் பிரச்சாரம் செய்ய வந்தததால் ஓபிஎஸ் அணியினர் தங்களது பிரச்சார கூட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றிக் கொண்டனர்.
ஓபிஎஸ்ஐப் பொறுத்தவரை அவருக்கு ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த தொண்டர்கள் பிரச்சாரத்தை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
ஆனால் டி.டி.வி.தினகரனுக்கு வெளியூரைச் சேர்ந்தவர்கள் தான் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதனால் எந்த இடத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரியாது அவர்கள் குழம்பி வருகின்றனர்
இந்நிலையில்  மேயர் பாசுதேவ் தெரு, வீராகுட்டி தெரு சந்திப்பில்  ஓபிஎஸ் தரப்பில் பிரச்சார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது டி.டி.வி.தினகரனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய சசிகலா அணியின் செய்தித் தொடர்பாள்ர் சி.ஆர்.சரஸ்வதி அங்கு வந்தார்.
இதையடுத்து சி.ஆர்.சரஸ்வதியிடம் போலீசார் வேறு பக்கம் சென்று பிரச்சாரம் செய்யுங்கள் என கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர் அங்கிருந்து செல்லாமல் அங்கேயே பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சி.ஆர்.சரஸ்வதி மீது சிலர் தக்காளியை வீசினர், தொடர்ந்து கற்களையும், செருப்புகளையும் அவர் மீது வீசத் தொடங்கினர். அம்மாவுக்கு துரோகம் செய்த சரஸ்வதியே உனக்கு இங்கு என்ன வேலை? என கேட்டு அங்கிருந்து துரத்தி அடித்தனர்
இதனையடுத்து அங்கிருந்து புறப்பட்ட  சி.ஆர்.சரஸ்வதி , ஓபிஎஸ்ஐப் பார்த்து அண்ணே நீங்களே இப்படி செய்யலாமா? என்று பரிதாபமாக கேட்டார்.

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates