நிர்வாண செல்ஃபியால் வந்த விபரீதம்: வைரலாக பரவும் விழிப்புணர்வு வீடியோ
நிர்வாண செல்ஃபியால் வந்த விபரீதம்: வைரலாக பரவும் விழிப்புணர்வு வீடியோ
தொழில்நுட்பம் வளர்ச்சி காரணமாக எல்லோர் கையிலும் செல்போனும் இண்டெர்நெட்டும் இலகுவாகிவிட்டது.
அதிலும் செல்போனில் செல்ஃபி எடுத்து பகிர்வது என்பது சர்வதாரணமான ஒரு செயல்தான் என்றாலும் இதில் சில விபரீதங்களும் நடப்பதை நாம் பார்கிறோம்.
அவ்வாறு ஏற்படும் விபரீதங்களை தவிர்ப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக புரானி தில்லி டாக்கீஸ் குழுவினர் நிர்வாண செல்ஃபி தொடர்பான விழிப்புணர்வு படம் எடுத்துள்ளனர். அதில் பெண் ஒருவர் தான் குளியலறையில் இருக்கும் போது செல்ஃபி எடுத்து தனது காதலனுக்கு அனுப்புகிறார். தன் காதலுடன் வற்புறுத்தி கேட்டுக்கொண்டதற்கு இணங்க அனுப்புகிறார். ஆனால் தவறுதலாக தன் அப்பாவிற்கு அனுப்பிவிட பெரும் பிரச்னையாகிவிடுகிறது.
பெண்ணை அழைத்து அட்வைஸ் செய்து பல கதைகள் பேசும் அப்பா, இதை உன் அம்மாவிற்கு அனுப்பினால் தான் இனி நீ சரியாக நடந்து கொள்வாய் என கூறுகிறார். அந்தப்பெண் மன்னிப்பு கேட்டு அனுப்ப வேண்டாம் என்று எவ்வளவு கெஞ்சியும், அதை காதில் வாங்கி கொள்ளாத அவரது அப்பா, தன் மனைவிக்கு அனுப்பிவிடுகிறார்.
0 comments:
Post a Comment