Advertisements

Tuesday, 21 March 2017

மண்ணெண்ணெய் ரத்து...பயனாளிகள் அதிர்ச்சி...

மண்ணெண்ணெய் ரத்து...பயனாளிகள் அதிர்ச்சி...

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படாததை கண்டித்து பயனாளிகள் தங்களது குடும்ப அட்டைகளை சாலையில் வீசி ஆவேசமடைந்தனர்.

திருமங்கலத்தில் 27 வார்டுகளில் மொத்தம் 6,150 கார்டு தாரர்கள் உள்ளனர். அவர்களில் பலருக்கு திடீரென மண்ணெண்ணெய் விநியோகம் நிறுத்தப்பட்டதை அறிந்து பயனாளிகள் அதிர்ச்சியடைந்தனர்.

எரிவாயு சிலிண்டர் இல்லாத நிலையில் அதற்காக பதிவு செய்திருப்பதாக வேதனை தெரிவித்தனர். திருமங்கலத்தில் 30 சதவீத அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படாத குடும்ப அட்டை இருந்து என்ன பயன் என வினவிய அவர்கள், அதனை சாலையில் வீசி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates