Advertisements

Tuesday, 20 August 2019

இரு பெண்களை திருமணம் செய்து கொண்ட வாலிபருக்கு அக்கா மகளின் மீது ஆசை

இரு பெண்களை திருமணம் செய்த வாலிபருக்கு அக்கா மகளின் மீது ஆசை: என்ன நடந்தது?




ராமநாதபுரம் அருகே, ஏற்கெனவே இரு பெண்களை செய்து கொண்ட கூலித் தொழிலாளிக்கு, மீண்டும் தனது அக்கா மகளின் மீது ஆசை ஏற்பட்டது. அதனால் நேர்ந்த விபரீதத்தை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்!


ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள கரிச்சான்குண்டு பகுதியில் வசிப்பவர் பாண்டி(40). கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியில் வசித்த தனது மாமன் மகள்களான தென்னரசி (32), அவரது தங்கை தாமரைச்செல்வி (30) ஆகிய இருவரையும் திருமணம் செய்து கொண்டார்.

முதல் மனைவி தென்னரசி, தனது மகளுடன், கரிச்சான்குண்டு கிராமத்திலும், 2வது மனைவி தாமரைச்செல்வி, தனது மகனுடன் பனைக் குளத்தில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாண்டி கடந்த சில மாதங்களாக கரிச்சான்குண்ட்டில் உள்ள முதல் மனைவியின் வீட்டில் தங்கியிருந்தார். அந்த வீட்டின் எதிரே பாண்டியின் அக்கா, தனது மூன்று மகள்களுடன் வசித்து வந்தார். இதில் 16 வயதான மூத்த மகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

தண்ணி அடிச்சிட்டு இப்படியா கார் ஓட்றது? நடைபாதை பயங்கரம்- தூக்கி வீசப்பட்ட பொதுமக்கள்!

ஏற்கெனவே இரு பெண்களை திருமணம் செய்த பாண்டிக்கு, அக்காளின் மகள் மீதும் ஆசை ஏற்பட்டது. 16 வயது சிறுமியிடம் சென்று திருமணம் செய்து கொள்வதாக பாண்டி ஆசை வார்த்தை கூறியுள்ளார். அவர் ஏற்கெனவே திருமணமானவர் என்று தெரிந்திருந்தும் பாண்டியின் வார்த்தைகளை சிறுமி நம்பியுள்ளார்.

இதையடுத்து கடந்த 31-ம் தேதி, வீட்டில் இருந்த சிறுமி மாயமானர். இதனால் பதறிய அவரது தாய், சிறுமியை பல இடங்களில் தேடியும் காணாததால் திருப்புல்லாணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

அதே நேரத்தில் பாண்டியும் தனது முதல் மனைவியின் மகள், 2-வது மனைவியின் மகனுடன் மாயமாகி இருந்தார். இதனால் பாண்டி மீது சந்தேகமடைந்த போலீசார் அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, அவர் தஞ்சாவூரில் ஒரு லாட்ஜில் தங்கி இருப்பது தெரியவந்தது.

அவ என்னை ஏமாத்திட்டா! காதலிக்காக தற்கொலைக்கு முயன்ற காதலன் கண்ணீர்!

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு 16 வயது சிறுமி, மகன், மகளுடன் இருந்த பாண்டியை கைது செய்தனர். மீட்கப்பட்ட சிறுமி அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். 2 குழந்தைகளும் அவர்களது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பாண்டி தனது அக்காளின் 16 வயது மகளை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளார். பழனிக்கு சென்ற அவர்கள் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தஞ்சாவூருக்கு சென்று அங்குள்ள லாட்ஜில் தங்கி குடும்பம் நடத்தினர். குழந்தைகளுடன் சென்றால்தான் யாருக்கும் சந்தேகம் வராது. தங்குவதற்கு வீடும் கிடைக்கும் என கருதி இரு குழந்தைகளையும் பாண்டி அழைத்து சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து பாண்டியை கைது செய்த போலீசார், அவன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர்.
பேத்திக்கு ஏண்டா போன் பண்ணி டார்ச்சர் பண்றே?- தாத்தாவை கொடூரமாக கொன்ற இளைஞர்கள்! 

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates