Advertisements

Sunday, 25 August 2019

கார் டிரைவரால் மாடலுக்கு நேர்ந்த கொடூரம் சிசிடிவியை வைத்து பிடித்த போலீஸ்.. கேப் ஓட்டுநரின் ஷாக் வாக்குமூலம்

 கார் டிரைவரால் மாடலுக்கு நேர்ந்த கொடூரம்  சிசிடிவியை வைத்து பிடித்த போலீஸ்.. கேப் ஓட்டுநரின் ஷாக் வாக்குமூலம்





முதலில் கொலை செய்யப்பட்டவர் தொடர்பான தகவல்தான் கிடைத்ததே தவிர கொலைக்கான காரணமோ கொலையாளியோ சிக்கவில்லை.
இதனால், இறந்த பெண்ணை அடையாளம் காண்பதில் போலீஸாருக்கு சிக்கல் எழுந்தது. கர்நாடகா மாநிலத்தில் காணாமல் போன பெண்களின் அடையாளங்களோடு இந்தப் பெண்ணின் அடையாளம் ஒத்துப் போகவில்லை. விமான நிலையம் அருகே உடல் கண்டுபிடிக்கப்பட்டதால், மற்ற மாநில போலீஸாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், `கொல்கத்தா மாடலான பூஜா ஜூலை மாதம் பெங்களூரூ வந்தார். ஜூலை 30 -ம் தேதி மாலை கிரெஸன்ட் சாலையில் இருந்து பரப்பன அக்ரஹாரவில் இருக்கும் தனியார் விடுதிக்குச் செல்ல ஓலா கேப் காரை புக் செய்துள்ளார். அப்போது கேப் டிரைவர் நாகேஷ் என்பவர் அவரை ஹோட்டலில் விட்டுள்ளார்.

அன்று அதிகாலை பூஜாவுக்கு விமானம் இருந்ததால், அதே டிரைவரை பின்னர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, `அதிகாலை 4 மணிக்கு விமான நிலையம் செல்ல வேண்டும். வர முடியுமா' எனக் கேட்டுள்ளார். அவரும் சம்மதித்துள்ளார். அதன்படி அவரை அதிகாலை 4.15 மணிக்கு ஓசூர் சாலையில் இருந்து விமானம் நிலையம் அழைத்துச் செல்ல நாகேஷ் வந்துள்ளார்.

பின்னர் பாதிவழியில் விமானநிலையம் செல்லாமல் வேறு திசையில் காரை திருப்பியதுடன் ஆள் இல்லாத இடத்தில், தனக்கு பணத்தேவை இருப்பதாகவும், அதனால் கையில் இருக்கும் பணத்தைக் கொடுக்கும்படி மிரட்டியுள்ளார். ஆனால் பூஜா மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட, காரில் இருக்கும் ஜாக்கி கம்பி கொண்டு கடுமையாகத் தாக்கினார்.

பின்னர், அவரது பைகளை சோதனையிட்டபோது அதில் 500 ரூபாய் மற்றும் இரு செல்போன்கள் மட்டுமே இருப்பதைப் பார்த்து கோபமடைந்துள்ளார். இதைத் தொடர்ந்து விமான நிலையத்துக்குப் பின்னால் இருக்கும் இடத்தில் அவரைத் தள்ளிவிட நினைத்தார் ஓட்டுநர். ஆனால், அதற்குள் பூஜாவுக்கு நினைவு திரும்பி காரிலிருந்து தப்பிக்க முயன்றார்.

அப்போதுதான் கொல்கத்தாவைச் சேர்ந்த பூஜா சிங்தான் கொலை செய்யப்பட்டவர் என்ற தகவல் தெரியவந்தது. பூஜா மாடலிங் துறையில் பணியாற்றி வருவதுடன் ஈவென்ட் மேனேஜராகவும் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஜூலை மாதம் 30-ம் தேதி பெங்களூரு நகருக்கு தனது தொழில் தொடர்பாக வந்தார் என்ற தகவலும் தெரியவந்தது.

ஆனால், கொலை செய்யப்பட்டவர் தொடர்பான தகவல்தான் கிடைத்ததே தவிர கொலைக்கான காரணமோ கொலையாளியோ சிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, விசாரணையை தீவிரப்படுத்தியதில் ஓலா கேப் ஓட்டுநர் ஒருவர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்..

அதனால் தன்னிடம் இருந்த கத்தி மற்றும் கையில் கிடைத்த கல்லைக் கொண்டு அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பூஜா நிலைகுலைந்து பலியானார். பின்னர் விமான நிலையத்தின் சுற்றுச்சுவர் அருகே அவரது உடலைக் கொண்டு போட்டுவிட்டு தப்பிவிட்டார். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவருக்கு பணத்தேவை இருந்ததும், காருக்கு கடந்த 2 மாதங்களாக இ.எம்.ஐ கட்டாததும் தெரியவந்தது” என்றனர் போலீஸார்.

மேலும் போலீஸார், `கொலைசெய்யப்பட்டது பூஜாதான் என்பதை உறுதி செய்தபின்னர் டெல்லி மற்றும் கொல்கத்தா போலீஸ் மூலம் அவர் கார் புக் செய்ததை அறிந்துகொண்டோம். அதன் பின்னர்தான் நாகேஷ் சிக்கினார்' என்றனர். மேலும், நாகேஷ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் எனவும் போலீஸார் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates