ஜெட்லியின் இறுதி ஊர்வலம்
ஜெட்லியின் இறுதி ஊர்வலம்
புதுடில்லி: மறைந்த முன்னாள் நிதி அமைச்சரான அருண்ஜெட்லியின் உடல், ராணுவ வாகனத்தில் வைத்து இறுதி ஊர்லவம் புறப்பட்டு சென்றது. முன்னதாக டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது. இங்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர்.சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அருண்ஜெட்லி டில்லி 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் கடந்த 15 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். நேற்று பிற்பகல் காலமானார். அவரது இறுதி சடங்கு இன்று( ஆக.,25) டில்லியில் நடக்கிறது.பா.ஜ., அலுவலகத்தில் ஜெட்லி உடல்ஜெட்லியின் உடல் இன்று காலை பா.ஜ. தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பா.ஜ. உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அருண் ஜெட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின் அங்கிருந்து இறுதி சடங்குக்காக நிகாபோத் காட் பகுதிக்கு அருண் ஜெட்லி உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. மதியம் 2 மணியளவில் இறுதிச்சடங்கு நடக்கிறது

0 comments:
Post a Comment