Advertisements

Thursday, 23 March 2017

மீன்வள மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

மீன்வள மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம் மாவட்ட மீன்வளத் துறையில் காலியாக உள்ள மேற்பார்வையாளர் தரம்-2 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டம், நீலாங்கரை மீன்வளத் துறை உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள காஞ்சிபுரம், எடமச்சி மீன்வளத் துறை ஆய்வாளர் அலுவலகங்கள் மற்றும் மாமல்லபுரம் சார் நிலை ஆய்வாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள 3 மேற்பார்வையாளர் தரம்-2 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதில், ஆதிதிராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.

தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். வலை பின்னுதல் மற்றும் அறுந்த வலைகளை பின்னுதல் தெரிந்திருக்க வேண்டும். 01-07-2017 அன்று 18 வயதுக்கு மேற்பட்டும், 35 வயதுக்கு உள்பட்டும் இருக்க வேண்டும்.
பணிகள்: மீன்வள மேற்பார்வையாளர் தரம் 2-க்கு, மீன் பண்ணைகளில் மீன் குஞ்சுகளை வளர்த்தெடுக்கும் பணிகளான நாற்றங்கால் தயாரித்தல், சினை மீன்களைப் பராமரித்தல், மீன்களுக்கு உணவிடுதல், தூண்டுதல் முறையில் மீன்கள் இனப்பெருக்க முறைகளை மேற்கொள்ளுதல், உள்நாட்டு நீர்நிலைகளில் மீன்வள பாதுக்காப்பை உறுதிப்படுத்திட ரோந்து பணிகள் மேற்கொள்ளுதல், தேவையின் அடிப்படையில் கடலுக்கு படகில் சென்று ரோந்து பணி மேற்கொள்ளுதல், மீன் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய்க்கு ரசீது வழங்குதல், உரிய பதிவேடுகள் பராமரித்தல் உள்ளிட்டவையாகும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 07-04-2017 பிற்பகல் 5.45 மணிக்குள் தங்களது கல்விச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், சான்றொப்பம் பெறப்பட்ட நகல்களுடன், மீன்வளத் துறை இணை இயக்குநர், எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி.நகர், சென்னை-600 028 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு 044-24938596 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் அறிந்து கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates