அடி ஆத்தி... இத்தனை வேட்பாளர்களா? ஆர்.கே.நகரில் 127 வேட்பாளர்கள்...
அடி ஆத்தி... இத்தனை வேட்பாளர்களா? ஆர்.கே.நகரில் 127 வேட்பாளர்கள்...
சென்னை: அடி ஆத்தி... இத்தனை வேட்பாளர்களா என்று ஆர்.கே. நகர் தொகுதி மக்களே வியந்து போய் உள்ளனர். என்ன காரணம் தெரியுங்களா?
இத் தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட 127 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பதுதான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஆர்.கே. நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக கடந்த 16ம் தேதி துவங்கிய வேட்புமனு தாக்கல் நேற்று மதியம் 3 மணியுடன் நிறைவு பெற்றது. தேர்தலில் போட்டியிட 127 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
தி.மு.க.,வின் மருதகணேஷ், ஓ.பி.எஸ்., அணி சார்பில் மதுசூதனன், சசி அணியின் தினகரன், பா.ஜ.,வின் கங்கை அமரன், தே.மு.தி.க., வேட்பாளர் மதிவாணன், மார்க்சிஸ்ட் கட்சி ஆர்.
லோகநாதன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய வேட்பாளர்கள்.
வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீண் நாயர் மனுக்களை பெற்று கொண்டார். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.
0 comments:
Post a Comment