Advertisements

Wednesday, 29 March 2017

தங்கம் விற்க வந்தது புது கட்டுப்பாடு

தங்கம் விற்க வந்தது புது கட்டுப்பாடு

கோல்கட்டா: அவசர தேவைக்காக, வீட்டில் இருக்கும் நகைககளை விற்பதில், ஏப்., 1ம் தேதி முதல் புது சிக்கல் வருகிறது. ஒரு நபர், ஒரு நாளைக்கு, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை மட்டுமே இனிமேல் ரொக்கமாக விற்பனை செய்ய முடியும். 20,000 ரூபாய் கட்டுப்பாடு இந்தியர்களுக்கு தங்கத்தில் முதலீடு செய்வது என்பது வழிவழியாக வரும் பழக்கம். அவசர பண தேவைக்கு நகைகளை அடகு வைப்பது, விற்பனை செய்வது என்பது சாதாரண விஷயம்.இதில் புதிய கட்டுப்பாட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. சமீபத்தில், நிதி மசோதாவில் ஒரு திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, ஒரு நபர், ஒரு நாளைக்கு, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை மட்டுமே ரொக்கமாக விற்பனை செய்ய முடியும்.
இதற்கு முன் இந்த தொகை, 20 ஆயிரம் ரூபாய் என்ற அளவுக்கு இருந்தது. ஏப்ரல், 1ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. இதற்கு முன், 20 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே நகைகளை ரொக்கமாக விற்பனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தாலும், நகை கடைக்காரர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ரசீதுகளை போட்டு, நகைகளை பெற்றுக் கொள்வர். எனவே, வீட்டு நகைகளை விற்பனை செய்வதில் எந்த சிக்கலும் இல்லாமல் இருந்தது.

கிராம மக்களுக்கு சிக்கல் இனிமேல், இந்த விஷயத்திலும் சிக்கல் வந்தது. ஒரு நபருக்கு, ஒரு ரசீதுக்கு மேல், நகை கடை பதிவு செய்தால், வருமான வரித்துறையினருக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும். இது குறித்து இந்திய தங்கம் மற்றும் நகை கடைக்காரர்கள் சங்க தேசிய இயக்குனர் சவுரப் காட்கில் கூறுகையில், '' இந்த கட்டுப்பாட்டால், கிராம மக்கள் தான் பெரிதும் பாதிக்கப்படுவர். அவர்களுக்கு வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்வது, ஆன் லைன் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்வது போன்ற நடைமுறைகள் இன்னும் முழுமையாக சென்று சேரவில்லை.

நகரங்களை பொறுத்தவரை நகைகளை விற்பனை செய்ய வருபவரின் வங்கி கணக்குக்கு நகை கடைக்காரர் தொகையை செலுத்தி விடுவார். அவர் பின்னர் வங்கியில் இருந்து பெற்றுக் கொள்வார்,'' என்றார்.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates