Advertisements

Saturday, 25 March 2017

சந்தேகம்... சந்தேகம்... திருமணமான கல்லூரி மாணவி தற்கொலை

சந்தேகம்... சந்தேகம்... திருமணமான கல்லூரி மாணவி தற்கொலை

சென்னை: திருமணமான கல்லூரி மாணவியின் தற்கொலை சம்பவம் தொடர்பாக அவரது கணவர் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோரிமேடு சுப்பையா நகரை சேர்ந்த புவனேஸ்வரி, வேல்ராம்பட்டு தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை மூலக்குளம் பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் காதலித்து வந்தார். பின்னர் திருமணம் செய்துகொள்ளவோம் என்று லோகேஸ்வரன் வற்புறுத்தி உள்ளார். இதையடுத்து இருவீட்டார் ஒப்புதலுடன் கடந்த டிசம்பர் மாதம் 4-ம் தேதி திருமணம் நடந்துள்ளது.

முன்னதாக தான் ஜிப்மர் மருத்துவமனை ஊழியர் என்று தெரிவித்து இருந்தாராம் லோகேஸ்வரன். ஆனால் அவர் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி பின்னர் வேலை இல்லாமல் இருந்துள்ளார் என்பது திருமணத்திற்கு பின்னர் தெரிய வந்துள்ளது.

இதனால் கணவன், மனைவி இடையே தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் தன் தாய் வீட்டுக்கு சென்ற புவனேஸ்வரியை அவரது பெற்றோர் சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். மேலும் புவனேஸ்வரி மீது சந்தேகப்பட்டு வந்துள்ளார் லோகேஸ்வரன்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று கணவர் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார் புவனேஸ்வரி. தொடர்ந்து அவரது கணவர் மற்றும் மாமியார் தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் புவனேஸ்வரியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் மற்றும் மாமியாரை கைது செய்துள்ளனர்.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates