விஜய் அரசியலுக்கு வருவாரா? எஸ்.ஏ.சந்திரசேகர் பரபரப்பு பேட்டி
விஜய் அரசியலுக்கு வருவாரா? எஸ்.ஏ.சந்திரசேகர் பரபரப்பு பேட்டி
கன்னியாகுமரி- திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகர் கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆர்.கே. நகர் தேர்தலில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு வலுவான எதிர்கட்சிக்கு சாதகமாக மாறியுள்ளது. சினிமாவில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் சட்ட விதிமுறைகளின்படி யார் வேண்டுமானாலும் நிற்கலாம். ஆனால் எங்களுக்குள் ஒரு சட்டம் உள்ளது. நான் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறேன் இதனால் 2 சங்கத்திலும் உறுப்பினராக இருக்கலாம். ஆனால் தலைவர் பதவி என்றால் ஒரு சங்கத்தில் தான் இருக்க முடியும். அப்படி இருந்தால்தான் சங்க உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளையும், பிரச்னைகளையும் தலைவரை சந்தித்து எடுத்து கூற முடியும்.
அதற்கான உரிய நடவடிக்கையும் எடுக்க முடியும். 2 சங்கத்தின் தலைவராக இருந்தால் அது சாத்தியமில்லை. இளையராஜா விவகாரத்தில், பாட்டு உள்பட அனைத்தும் தயாரிப்பாளருக்கு தான் சொந்தம். ஒரு சினிமா என்றால் அதில் பலரின் மூளை பயன்படுத்தப்பட்டிருக்கும்.
அதற்கான விலை பில் போட்டு கொடுக்கப்பட்டிருக்கும். எனவே அதன்பின்னரும் உரிமை கோர முடியாது. ஒரு நடிகராக இருந்தால் எளிதாக அரசியலுக்கு வரமுடியும் என்ற நிலை உள்ளது. ஆனால் இப்போது அரசியல் வியாபாரமாக மாறிவிட்டது. கடந்த 10 ஆண்டுக்கு முன்பு விஜயை அரசியலுக்கு கொண்டு வர முயற்சி செய்தேன். ஆனால் தற்போது உள்ள வியாபார அரசியல் சூழ்நிலையில் அவரை அரசியலுக்கு கொண்டு வர வேண்டாம் என முடிவு செய்துள்ளோம். திருட்டு விசிடி ஒழிக்க அண்டை மாநிலங்களில் அரசு முழு முயற்சி எடுத்து காவல் துறையை வைத்து ஒடுக்குகிறது. ஆனால் தமிழ்நாட்டில் திருட்டு விசிடியை ஒழிக்க அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எங்களுக்கும் மக்கள் இயக்கம் இருக்கிறது. அதை வைத்து திருட்டு விசிடியை ஒழிக்க நடவடிக்கை எடுப்போம். அது அரசியல் இயக்கமாக வராது.
இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
Post a Comment