Advertisements

Monday, 27 March 2017

டுவிட்டர், பேஸ்புக்கில் புகார் செய்யலாம்

டுவிட்டர், பேஸ்புக்கில் புகார் செய்யலாம்

புதுடில்லி: சமையல் காஸ் சிலிண்டர் சப்ளையில் பிரச்னை, பெட்ரோல் பங்க்கில் பிரச்னை என்றால், இனிமேல் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் இணைய தளங்களில் புகார் செய்யும் புது வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த வெள்ளிக்கிழமை, MoPNG eSeva என்ற பெயரில் புதிய வசதியை டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் தொடங்கி வைத்தார். மற்ற சமூக இணைய தளங்களிலும் இந்த வசதி விரைவில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.MoPNG eSeva என்ற இணைப்பில் நுகர்வோர் தங்கள் குறைகளை நேரடியாக அரசுக்கு தெரிவிக்கலாம். இந்த இணைப்பில் தெரிவிக்கப்படும் புகார்களை கண்காணிக்க, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வசதி 24 நேரமும் செயல்படும். பெட்ரோலிய துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளும், இந்த இணைப்பில் தெரிவிக்கப்படும் புகார்களை கண்காணிப்பர்.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates