கருணாஸ் கட்சி கூண்டோடு கலைப்பு
கருணாஸ் கட்சி கூண்டோடு கலைப்பு
சென்னை- நடிகரும் திருவாடானை எம்எல்ஏவுமான கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படை என்ற பெயரில் கட்சி நடத்தி வருகிறார். கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அவருக்கு மட்டும் சீட் வழங்கப்பட்டது. அவர் வெற்றி பெற்றார். இந்தநிலையில் கருணாஸ் தனது கட்சியின் நிர்வாகிகள் அனைவரையும் கூண்டோடு மாற்றியுள்ளார். அதற்கு முக்கிய காரணம், கருணாசால் நியமிக்கப்படாமல் பலரும் தாங்களாகவே புதிய பதவிகளை போட்டுக் கொண்டு செயல்படுவதாக புகார்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்துதான் அவர் தனது கட்சி நிர்வாகத்தை கூண்டோடு கலைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முக்குலத்தோர் புலிப்படையின் மாநில நிர்வாக அமைப்பு கூண்டோடு கலைக்கப்பட்டது.
விரைவில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பிறகு புதிய மாநில நிர்வாகிகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். ஏற்கனவே, நிர்வாகிகளாக செயல்பட்டவர்கள் எனது அதிகாரப்பூர்வ அனுமதி கடிதம் இல்லாமல் தற்காலிகமாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment