பாகுபலி-2 கர்நாடகாவில் திரையிடப்படுவதில் சிக்கல்
பாகுபலி-2 கர்நாடகாவில் திரையிடப்படுவதில் சிக்கல்
ஐதராபாத்: பாகுபலி-2 கர்நாடகாவில் திரையிடப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதற்கு காரண கர்த்தாவாக சத்யராஜ் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
இயக்குனர் ராஜமெளலி இயக்கிய "பாகுபலி 2" திரைப்படம் அடுத்த மாதம் 28ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்துள்ளது. ஆனால் இந்த முறை எழுந்துள்ள சிக்கலுக்கு சத்யராஜின் தமிழ் உணர்வுதான் காரணம்.
கடந்த சில வருடங்களாகவே காவிரி நதிநீர் பிரச்னை பற்றி சத்யராஜ் கடுமையாக பலமுறை கர்நாடக அரசை விமர்சித்து வந்துள்ளார். தனது பேச்சிற்காக சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிடில் "பாகுபலி 2" படத்தை கர்நாடகத்தில் ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்றும் ஒரு குரூப் போராட்டம் செய்கிறது.
மன்னிப்பு கேட்பது என்பதே என் அகராதியில் இல்லை என்று சத்யராஜ் தரப்பு தெரிவித்துள்ளதால் படரிலீஸ் நாள் நெருங்கும்போது இந்த பிரச்னை இன்னும் விஸ்வரூபம் எடுக்கும் என்று கூறப்படுகிறது.இதனால்தான் பாகுபலி 2 ட்ரைலர் வெளியான அன்று கன்னட அமைப்புகளின் போராட்டத்தால் அங்கு எந்த தியேட்டரிலும் டிரெய்லர் திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment