Advertisements

Monday, 27 March 2017

திருநங்கைகள் கலை நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கிறார் ராகவா லாரன்ஸ்

திருநங்கைகள் கலை நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கிறார் ராகவா லாரன்ஸ்

நெல்லையில் வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) திருநங்கைகளின் கலை நிகழ்ச்சி நடந்து வருகிறது.

இது குறித்து திருநங்கைகள் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருநங்கைகள் ஒன்று கூடி பல்வேறு மாவட்டங்களில் விழா நடத்தி வருகிறார். நெல்லை மாவட்டம் சார்பில் மாற்றத்தை நோக்கி திருநங்கைகள் என்ற தலைப்பில் திருவிழா நெல்லை சந்திப்பில் உள்ள சங்கீத சபாவில் வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. நாலூமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியர் மோகன் சி.லாசரஸ் தலைமை தாங்குகிறார்.

மூத்த திருநங்கைகளான கங்கா நாயக், சீமா நாயக் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
தொழிலதிபர் லட்சுமி ஆனந்த் வரவேற்று பேசுகிறார்கள்.

நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ரஞ்சித், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர், இலவச சட்ட உதவி மைய நிதிபதி தமிழரசி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்த கொள்கிறார்கள்.

நிகழ்ச்சியில் திருநங்கைகளின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். தொடர்ந்து தொழில் அதிபர்கள் திருநங்கைகளின் வேலை வாய்ப்பு குறித்து பேசுகிறார்கள். தமிழக திருநங்கைகளின் குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.

சென்னை, தேனி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த திருநங்கைகள் கலந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates