Advertisements

Friday, 24 March 2017

ஆப்பிள் கோரிக்கைகளுக்கு நோ சொன்ன மத்திய அரசு..


ஆப்பிள் கோரிக்கைகளுக்கு நோ சொன்ன மத்திய அரசு..

புதுடெல்லி: இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் சார்பில் மத்திய அரசிடம் சிறப்பு சலுகைகள் கோரப்பட்டது. ஆப்பிள் தயாரிப்பு பணிகள் துவங்கப்பட இருக்கும் நிலையில் மத்திய அரசு சார்பில் ஆப்பிள் நிறுவனத்தின் பெரும்பாலான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்திற்கு சிறப்பு சலுகைகள் வழங்குவது குறித்து மக்களவையில் பதில் அளித்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரியான நிர்மலா சீத்தாராமன் ஆப்பிளின் பெரும்பாலான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

சாதனங்களை தயாரிப்பது, அவற்றை சரி செய்வது, உதிரி பாகங்களை தயாரிப்பது, ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் இயந்திரங்கள், அவற்றுக்கு தேவைப்படும் உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றிற்கு சுங்க வரியில் சிறப்பு சலுகை வழங்கப்பட வேண்டும் என இதுவரை இல்லாதளவு சிறப்பு சலுகைகளை ஆப்பிள் நிறுவனம் மத்திய அரசியம் கோரியுள்ளது என நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.

ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்தியா மிகப்பெரிய சந்தையாக பார்க்கப்படுகிறது. ஆப்பிள் தலைமை செயல் அதிகாரியான டிம் குக் கடந்த ஆண்டு முதல் முறையாக இந்தியா வந்திருந்தார். அப்போது இந்தியாவில் ஆப்பிள் சாதனங்களை தயாரிப்பது குறித்த தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

இந்தியாவில் ஆப்பிள் சாதனங்களின் விலை தற்சமயம் இருப்பதை விட மேலும் குறைக்கப்பட வேண்டும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்கும் போது விலையை குறைவாக நிர்ணயம் செய்யலாம் என ஆப்பிள் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை தயாரிக்க வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு சிறப்பு சலுகைகளை ஏற்கனவே வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates