Advertisements

Thursday, 23 March 2017

பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத் தாக்குதல்: 8 பேர் கைது; ஐ.எஸ். பொறுப்பேற்பு


பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத் தாக்குதல்: 8 பேர் கைது; ஐ.எஸ். பொறுப்பேற்பு

அஞ்ச மாட்டோம் - பிரதமர் தெரசா மே
பிரிட்டன் நாடாளுமன்ற வளாகம் அருகே நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச பயங்கரவாத இயக்கம் (ஐ.எஸ்.) பொறுப்பேற்றது.
இந்த விவகாரம் குறித்து ஸ்காட்லாந்து யார்டு துணை ஆணையரும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவருமான மார்க் ரெளலி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
நாடாளுமன்ற வளாகம் அருகே நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக லண்டன், பர்மிங்ஹாம் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் புதன்கிழமை இரவு தேடுதல் வேட்டை நடத்தினர். மேலும் பல்வேறு இடங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது வரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த தாக்குதலை நிகழ்த்திய நபர் தனியாகச் செயல்பட்டார் என்றே தெரிகிறது. மேற்கொண்டு தாக்குதல்கள் எதுவும் நடைபெறக் கூடும் என்று அஞ்சும்படியான தகவல்கள் எதுவும் தற்போது இல்லை. விசாரணை முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளது. எனவே தாக்குதல் நடத்தியவரின் அடையாளம் எதையும் இப்போது வெளியிட முடியாது.
தாக்குதலில் ஒரு காவலர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நிகழ்த்திய பயங்கரவாதி போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் 29 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களில் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் 12 பேர், பிரான்ஸைச் சேர்ந்த 3 சிறார்கள், ருமேனியா, தென் கொரியா, ஜெர்மனி, போலந்து, அயர்லாந்து, சீனா, இத்தாலி, அமெரிக்கா, கிரீஸைச் சேர்ந்தவர்கள் அடங்குவர். துரதிருஷ்டவசமாக காயமடைந்தவர்களில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தாக்குதலை நிகழ்த்தப் பயன்படுத்தப்பட்ட கார் பர்மிங்ஹாம் பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
நாடாளுமன்ற வளாகம் அருகே தாக்குதல் நிகழ்த்திய நபர் வசித்த இடம் என்று கருதப்பட்ட லண்டனின் புறநகர்ப் பகுதியான மேற்கு மிட்லாண்டில் காவல்
துறையினர் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்றார் அவர்.
இஸ்லாமிய தேச பயங்கரவாதக் குழுவின் செய்தி அமைப்பாகச் செயல்படும் அமாக் வெளியிட்ட அறிக்கையில், தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது. தங்களின் அழைப்புக்கு ஏற்ப கலீஃபாவின் வீரர் அந்தத் தாக்குதலை நிகழ்த்தினார் என்று தெரிவித்தது.
பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நாடாளுமன்றக் கட்டடத்தில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
பயங்கரவாதியின் கத்திக் குத்துக்கு பலியான காவலருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில், காவல் துறை தலைமையகமான ஸ்காட்லாந்து யார்டு கட்டடத்திலும் காவல் துறையினரின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
பிரிட்டன் நாடாளுமன்ற வளாகம் அருகே தேம்ஸ் நதிக்கு குறுக்கே அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் லண்டன் மாநகரின் முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்றாகும். எந்த நேரத்திலும் அந்தப் பாலத்தில் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இருப்பதுண்டு. அந்தப் பாலத்தில் புதன்கிழமை பிற்பகல் காரை வேகமாக ஓட்டி வந்த பயங்கரவாதி சுற்றுலாப் பயணிகள் மீது மோதினார். நாடாளுமன்ற வளாக வாயிற்புறத்தில் காரை மோதி நிறுத்திய பயங்கரவாதி உள்ளே கத்தியுடன் பாய்ந்தார். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதக் காவல் வீரரைக் கத்தியால் தாக்கினார். இதையடுத்து, அந்த பயங்கரவாதியை போலீஸார் சுட்டு வீழ்த்தினர்.
இந்த சம்பவத்தில் 3 சுற்றுலாப் பயணிகளும் கத்திக் குத்துக்கு ஆளான காவலரும் உயிரிழந்தனர்.
நாடாளுமன்ற வளாகம் அருகே பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் தெரசா மே தலைமையில் உயர்நிலைப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குறித்த அவசர ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
பிரிட்டன் அரசி எலிஸபெத் வெளியிட்ட அறிக்கையில், லண்டனில் புதன்கிழமை நிகழ்ந்த வன்முறைச் செயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
பிரிட்டன் பிரதமருக்கு புதின் கடிதம்
பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வுக்கு ரஷிய அதிபர் விளாதிமர் புதின் எழுதிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
பிரிட்டன் தலைநகரில் நாடாளுமன்றம் அருகே நிகழ்த்தப்பட்டுள்ள பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். சர்வதேச அளவிலான பயங்கரவாதத்தை எதிர்கொள்ள உலக நாடுகள் ஒருங்கிணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதையே இந்த சம்பவம் சுட்டிக் காட்டுவதாக இருக்கிறது என்று புதின் அந்தக்

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates