Advertisements

Wednesday, 29 March 2017

மகேந்திர சிங் தோனியின் மனைவி மத்திய அமைச்சரிடம் புகார்!

மகேந்திர சிங் தோனியின் மனைவி மத்திய அமைச்சரிடம் புகார்!

ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஆதார் விண்ணப்ப விவரங்களை, டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளதாக, அவரது மனைவி மத்திய அமைச்சரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
தோனியின் ஆதார் விண்ணப்ப போட்டோ டுவிட்டரில்: ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியை சேர்ந்த தோனி, சமீபத்தில் தனக்கு ஆதார் எண் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இப்பணியில் ஈடுபட்ட சி.எஸ்.சி. இ -கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம் இதை பெருமையுடன் டுவிட்டரில் போட்டோக்களுடன் வெளியிட்டது. தோனி தன் கைரேகைகளை பதிவு செய்யும் போட்டோ, அவரது ஆதார் விண்ணப்ப போட்டோ ஆகியவை, டுவிட்டரில் வெளியானது.

தொழில்நுட்ப துறை அமைச்சரிடம் புகார்: இதை பார்த்து கடுப்பான தோனியின் மனைவி சாக் ஷி சிங், டுவிட்டர் மூலமே, மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் புகார் அளித்தார். இதற்கு சி.எஸ்.சி., நிறுவனம் சார்பில், போட்டோ மட்டுமே வெளியிடப்பட்டதாக கூறப்பட்டது.

விண்ணப்ப போட்டோ: இதனால், மேலும் கடுப்பான சாக் ஷி சிங், 'விண்ணப்ப போட்டோவை வெளியிடலாமா; தனி மனித சுதந்திரத்தில் இன்னும் என்ன மிச்சம் இருக்கிறது' என, பதில் கேள்வி எழுப்பினார். கடைசியாக அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இப்பிரச்னை குறித்து விசாரிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates