Advertisements

Monday, 27 March 2017

உலகளவில் 120 நாடுகளில் ஒரே நேரத்தில் களம் குதிக்கும் நோக்கியா

உலகளவில் 120 நாடுகளில் ஒரே நேரத்தில் களம் குதிக்கும் நோக்கியா

நியூயார்க்: உலகளவில் ஒரே நேரத்தில் 120 நாடுகளில் நோக்கியா நிறுவனம் தன் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு... எத்தனை காலம் ஆனாலும் நான் ஜாம்பவான் என்று நிரூபிக்க உள்ளது.

இதுகுறித்து ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் என்ன சொல்லியிருக்கிறது தெரியுங்களா?

ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களை நோக்கியா நிறுவனம் மீண்டும் அறிமுக செய்துள்ளது. 120 நாடுகளில் ஒரே நேரத்தில் நோக்கியா போன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா 6, நோக்கியா 5, நோக்கியா 3, மொபைல் போன்கள் மே அல்லது ஜீன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு நாட்டிற்கும் விலை மாறுபடும்.

இந்திய ரூபாய்க்கு புதிய நோக்கியா 3 ரூ.9,800-க்கும், நோக்கியா 5 ரூ.13,500-க்கும், நோக்கியா 6 ரூ.16,000-க்கும், நோக்கியா 3310 ரூ.3,500-க்கும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெகு நாட்கள் கழித்து நோக்கியா நிறுவனம் மீண்டும் சந்தையில் களமிறங்கியுள்ளது. புதிதாக ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதனால் நோக்கியா நிறுவனம் மீண்டும் தான் செல்உலகில் ஜாம்பவான் என்று நிரூபிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates