Advertisements

Friday, 24 March 2017

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: தஞ்சை கலெக்டர் தகவல்..!!

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: தஞ்சை கலெக்டர் தகவல்..!!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து கலெக்டர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் குழந்தைகள் இல்லங்களில் கல்வி பயின்ற, பயிலும் மாணவ, மாணவிகள், முன்னாள் ராணுவத்தினர், பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் (முன்னுரிமை பெற்றவர் - முன்னுரிமை பெற்றவர் கிடைக்கப் பெறாத நேர்வில் முன்னுரிமையற்றவர் தேர்வு செய்யப்படுவார்) காலியாக உள்ள பணியிடங்களுக்கான விண்ணப்பதாரரின் விண்ணப்பத்தை தகுதி அடிப்படையில் நிரப்ப பரிசீலனை செய்ய ஏதுவாக விண்ணப்பத்தை தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்திலும் அல்லது www.socialdefence.tn.gov.in மற்றும் தஞ்சாவூர் மாவட்ட இணைய தள முகவரி www.thanjavur.tn.nic.in என்ற இணைய தளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் உரிய சான்றின் ஜெராக்சுடன் நாளை (25ம் தேதி)க்குள் பின்வரும் முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பங்களை இயக்குநர், சமூகப் பாதுகாப்புத் துறை, 300 புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லிஸ்,சென்னை 600 010 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விபரங்கள் அறிய தொலைபேசி 044-26426421, 044-26427022 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அரசினர் குழந்தைகள் இல்ல வளாகம்இ வ.உ.சி.நகர், தஞ்சாவூர் 613 007. தொலைபேசி எண் 04362-237014ல் தகவல்கள் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates