ஷங்கரை தலை குனிய வைத்த உறவினர்!
ஷங்கரை தலை குனிய வைத்த உறவினர்!
பெரிய ஆட்களுக்களுக்கு பல சமயங்களில் தரமசங்கடங்களை உருவாக்குவது அவர்களுடன் இருக்கும் உறவினர்களே. அப்படி ஷங்கரின் உறவினர் செய்த ஒரு வேலையால் ஷங்கர் தர்மசங்கடத்த்றிக்கு ஆளாகி மன்னிப்பு கேட்கும் வரை கொண்டு சென்று விட்டது. லைகா தயாரிப்பில் ரஜினி நடிப்பில் உருவாகும் 2.0 படத்தின் படப்பிடிப்பு திருவல்லிக்கேணி பகுதியில் நடைபெற்றுள்ளது. படப்பிடிப்பு நடைபெறுவதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்ப்பட்டுள்ளது. இதனையடுத்து அவ்வழியே சென்ற பிரபல ஆங்கில பத்திரிக்கையை சேர்ந்த இருவர் படக்குழுவிடம் போக்குவரத்துக்கு இடையூறு செய்வதை பற்றி குறிப்பிட்டுள்ளனர். படக்குழுவில் இருந்த ஷங்கரின் மைத்துனர் இவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட ஒரு கட்டத்தில் பத்திரிக்கையாளர்களை தாக்கவும் செய்துள்ளார்.
இதனையடுத்து படக்குழு மீது பத்திரிக்கையாளர்கள் காவல்துறையினரிடம் புகார் கொடுக்க, இதனை தாமதமாக அறிந்த ஷங்கர் விரைந்து சென்று பிரஸ் கிளப்பில் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்டு கொண்டார். இதனையடுத்து காவல்துறையிடம் கொடுத்த புகார் திரும்ப பெறப்பட்டது. ஷங்கர் மைத்துனரால் அவருக்கேற்ப்பட்ட இந்த தலைகுனிவை அடுத்து அவரை ஷங்கர் கண்டித்ததாக தெரிகிறது.
0 comments:
Post a Comment