மகிழ்ச்சியான நாடுகள் : 118 வது இடத்தில் இந்தியா
மகிழ்ச்சியான நாடுகள் : 118 வது இடத்தில் இந்தியா
ஐ.நா., : கடந்த, 2016 ம் ஆண்டின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஐ.நா., வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 118 வது இடத்தில் உள்ளது.சர்வதேச மகிழ்ச்சி தினம் இன்று (மார்ச் 20) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உலகளவில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை ஐ.நா., வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் டென்மார்ச் முதல் இடத்திலும், சுவிட்சர்லாந்து 2வது இடத்திலும், ஐஸ்லாந்து 3வது இடத்திலும், நார்வே 4 வது இடத்திலும், பின்லாந்து 5 வது இடத்திலும் உள்ளன. மொத்தம், 155 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் இந்தியா 118 வது இடத்தில் உள்ளது. மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் கடந்த ஆண்டை விட இந்தியா 10 இடங்கள் பின்தங்கி உள்ளதாக ஐ.நா., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமாலியா (76), சீனா (83), பாகிஸ்தான் (92), ஈரான் (105), பாலஸ்தீனம் (108), வங்கதேசம் (110) ஆகிய நாடுகளை விட இந்தியா பின்தங்கி உள்ளது.மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் அமெரிக்கா 13வது இடத்திலும், ஆஸ்திரேலியா 9 வது இடத்திலும், இஸ்ரேல் 11 வது இடத்திலும் உள்ளன.
0 comments:
Post a Comment