Advertisements

Sunday, 12 March 2017

விஐபி 2 சூட்டிங்கை நிறைவு செய்தார் கஜோல்

விஐபி 2 சூட்டிங்கை நிறைவு செய்தார் கஜோல்
  

நடிகை கஜோல், தான் நடித்து வந்த விஐபி 2 படத்தின் சூட்டிங்கை சமீபத்தில் நிறைவு செய்துள்ளார். இத்தகலை கஜோல் தனது இஸ்ட்ராகிராம் மூலம் தெரிவித்துள்ளார். இத்தகவலுடன் விஐபி 2 சூட்டிங்கில் இருக்கும் தனது போட்டோவையும் அவர் இஸ்ட்ராகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவில் கஜோலுடன் தனுஷ், டைரக்டர் சவுந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோரும் உள்ளனர். இஸ்ட்ராகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இப்போது தான் எனது கடைசி நாள் சூட்டிங்கை முடித்துள்ளேன். இந்த படக்குழுவினரை பிரிவதில் வருந்துகிறேன் என தெரிவித்துள்ளார். 2014 ம் ஆண்டு தனுஷ் நடித்து வெளிவந்த வேலையில்லா பட்டதாரி (விஐபி) படத்தின் 2 ம் பாகமாகும். இப்படத்தில் கஜோல் நெகட்டிவ் வேடம் ஒன்றில் நடித்துள்ளாராம். இப்படத்திலும் தனுஷ் தான் ஹீரோவாக நடித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates