Advertisements

Thursday, 23 March 2017

ரூ.2 லட்சம் பொருட்கள் கொள்ளை பெண்கள் கைது

ரூ.2 லட்சம் பொருட்கள் கொள்ளை பெண்கள் கைது

சென்னை : அம்பத்தூர் அடுத்த வானகரம், நாகேஸ்வரா சாலையில் தனியார் கம்பெனி உள்ளது. கடந்த 20ம் தேதி இரவு வேலை முடிந்ததும் மேலாளர் ஆறுமுகம் (45) கம்பெனியை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலை இவர் கம்பெனியை திறக்க வந்தபோது, கம்பெனியின் பக்கவாட்டு ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த மேலாளர் உள்ளே சென்று பார்த்தபோது, கம்பெனியில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள 10க்கும் மேற்பட்ட டிரில்லிங் மெஷின்கள் மற்றும் டிரில் பிட்டுகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிய சென்னை ஓட்டேரி, சீனிவாசபுரத்தை சேர்ந்த பாத்திமா (55), குப்பம்மாள் (50), சாமுண்டீஸ்வரி (40), மலர் (48), மஞ்சுளா (33) 5 பேரையும் கைது ெசய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates