நிதியுதவி...நிதியுதவி....பலியான வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் நிதியுதவி!நல்ல மனசுங்க நம்ம சாய்னாவுக்கு...
நிதியுதவி...நிதியுதவி....பலியான வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் நிதியுதவி!நல்ல மனசுங்க நம்ம சாய்னாவுக்கு...
புதுடில்லி: சத்தீஸ்கரில் மாநிலத்தில் நடந்த நக்சலைட்டுகள் தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்திற்கு பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவல் நிதி உதவி அளித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் உள்ள பேஜா என்ற பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது அங்கு வந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தியதில் 12 வீரர்கள் பலியானார்கள். 4 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
தலா ரூ.50 ஆயிரம்: இந்நிலையில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ. 6 லட்சம் நிதி உதவி வழங்குவதாக டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் அறிவித்துள்ளார்.
சாய்னா நேவால் வழங்கும் நிதி உதவி 12 வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 ஆயிரமாக பகிர்ந்து வழங்கப்படும்.
நக்சலைட்டுகளின் தாக்குதலில் உயிரிழந்த 12 சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்திற்கு ஏற்கனவே, நடிகர் அக்ஷய் குமார் ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் நிதிஉதவி அளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment