Advertisements

Sunday, 19 March 2017

பெரு நாட்டில் மழை, வெள்ளம்: பலி 72

பெரு நாட்டில் மழை, வெள்ளம்: பலி 72

லிமா; பெரு நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான, பெரு நாட்டின் லிமா பகுதியில் கடந்த 2 நாட்களாக பெரும் மழை பெய்து வருகிறது. இதனால் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து முழுவதும் துண்டிக்கப்பட்டு உள்ளது. பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. உணவு, உடையின்றி பொதுமக்கள் பலர் தவித்து வருகின்றனர். வசிப்பிடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், மக்களுக்கு பெரும் அவதி ஏற்பட்டுள்ளது. எல் - நினோ விளைவின் காரணமாகவே, கனமழை, வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக, அந்நாட்டு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates