விமானங்களில் லேப்டாப் கொண்டு செல்ல பிரிட்டன் தடை
விமானங்களில் லேப்டாப் கொண்டு செல்ல பிரிட்டன் தடை
லண்டன் : ஆறு நாடுகளைச் சேர்ந்த பயணிகள், விமானத்தில் லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் எடுத்து வர தடை விதித்து பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது. லேப்டாப்பிற்கு தடை : எகிப்து, கத்தார் உள்ளிட்ட எட்டு நாடுகளிலிருந்து லேப்டாப், கேமரா மற்றும் ஐ-பேடுகளை விமானத்தில் எடுத்து வருவதற்கு அமெரிக்க அரசு தடை விதித்திருந்தது. மொபைல் போன்கள் , மருத்துவ உபகரணங்கள் போன்ற பொருட்களுக்கு இந்த தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அமெரிக்காவை தொடர்ந்து, பிரிட்டனும் இந்த தடையை பிறப்பித்துள்ளது.துருக்கி, லெபனான், ஜோர்டான், எகிப்து, துனிசியா, சவூதி அரேபியா ஆகிய ஆறு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பிரிட்டனுக்கு வரும் போது விமானங்களில் லேப்டாப், டேப்லட், ஐ-பேடு போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை எடுத்து வர பிரிட்டன் தடை விதித்துள்ளது.
லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களின் உள்ளே வெடிக்கும் விதமான வெடிபொருட்கள் ஏதேனும் பதுக்கிவைத்து கொண்டு வரலாம் என கருதுவதால் இந்த முடிவை பிரிட்டன் அரசு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment