அள்ளி, அள்ளி கொடுக்கும் தயாரிப்பாளர்... படத்தோட ரேட்டிங்க் எகிறல்
அள்ளி, அள்ளி கொடுக்கும் தயாரிப்பாளர்... படத்தோட ரேட்டிங்க் எகிறல்
சென்னை: எண்ணி எண்ணி செலவு செய்யும் தயாரிப்பாளர்கள் மத்தியில் அள்ளி அள்ளி செலவு செய்கிறார் இவர் என்று கோலிவுட் கோகிலாக்கா தகவல் சொல்றாங்க...
அஜித்-சிவா கூட்டணியில் வீரம், வேதாளம் என 2 படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். இவர்கள் மூன்றாவது முறையாக விவேகம் படத்தில் இணைந்துள்ளனர், இந்த படம் ஆரம்பிக்கும் போது 70 சதவீத படப்பிடிப்பு வெளிநாட்டில் என்று சொன்னாங்க...
ஆனால், கடைசிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு நேற்று பல்கேரியா பறந்தது. இதனால் ஏறத்தாழ 90 சதவீத படப்பிடிப்பு வெளிநாட்டில் தான் நடக்கிறது.
என்ன காரணம் தெரியுங்களா? படம் தயாரிப்பாளர் எதிர்பார்த்ததை விட செம அருமையாக வந்துள்ளதாம்.
இதனால் மகிழ்ச்சி... மகிழ்ச்சி... இன்னும் பட்ஜெட் கூடினாலும் பரவாயில்லை என்று தயாரிப்பாளர் உற்சாக கொடி அசைத்துள்ளாராம். அதேபோல் விநியோகஸ்தர்கள் மத்தியில் நல்ல வியாபார போட்டி இருக்காம்... இருக்காம்.
0 comments:
Post a Comment