Advertisements

Thursday, 23 March 2017

மனைவிக்கு தொந்தரவு கொடுக்கும் நோக்கில் மாமனாருக்கு ஆபாச வீடியோ அனுப்பிய மருமகன் கைது


மனைவிக்கு தொந்தரவு கொடுக்கும் நோக்கில் மாமனாருக்கு ஆபாச வீடியோ அனுப்பிய மருமகன் கைது

பெங்களூரு: ஹூப்பள்ளியில் மனைவியை தொந்தரவு செய்வதாக நினைத்து மாமனாரின் செல்போனுக்கு ஆபாச வீடியோ அனுப்பி தொல்லை கொடுத்து வந்த மருமகனை போலீசார் கைது செய்தனர். ஹூப்பள்ளி விஜயநகரை சேர்ந்தவர் டாக்டர் மோகன் கடாமணி. இவரது மகளுக்கும் பாகல்கோட்டை மாவட்டம் முத்கோலாவை சேர்ந்த அருண் நாயக் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. ஆரம்பத்தில் சந்தோஷமாக வாழ்ந்து வந்த தம்பதிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு இருவரும்சேர்ந்து வாழ பிடிக்காமல் பிரிந்தனர். மேலும் இரு தரப்பிலும் விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அது குறித்த விசாரணை ஹூப்பள்ளி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் இவரது மனைவி செல்போனில், அருண் நாயக்கை அழைத்து பேசினார்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனைவியை தொந்தரவு செய்யவேண்டுமென்ற நோக்கில் அவருக்கு ஆபாச வீடியோவை மற்றும் போட்டோவை அனுப்பி வைத்தார். இந்த வீடியோ அனைத்தும் மனைவி பேசிய செல்போனிற்கு சென்றடைந்தது. ஆனால் கணவரிடம் பேசிய பின்னர் அந்த செல்போனை மனைவி எடுக்கவில்லை. மாறாக அவரது தந்தை பயன்படுத்தி வந்தார்.

இதற்கிடையில் செல்போன் மனைவி கையில் இருப்பதாக நினைத்து அருண், 100க்கும் அதிகமான ஆபாச வீடியோக்களை அடுக்கடுக்காக அனுப்பி வைத்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மோகன், மார்ச் 13ம் தேதி இது குறித்து அசோக்நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் செல்போனை கைப்பற்றி விசாரித்தனர். அதில் ஆபாச வீடியோக்கள் அனைத்தும் மருமகன் அருண் நாயக் செல்போன் நம்பரில் இருந்து வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் தற்போது காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates