வறண்டு வரும் புழல்: சென்னையில் மறையும் புனல்
வறண்டு வரும் புழல்: சென்னையில் மறையும் புனல்
சென்னை : சோழவரம், பூண்டி ஏரியில் இருந்து திறந்து விடப்படும் நீர், நிறுத்தப்பட்டதால் புழல் ஏரி வேகமாக வறண்டு வருகிறது. இதனால் சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பஞ்சத்தை நோக்கி தலைநகர் : 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 601 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இந்நிலையில், 881 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 6 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளதால் புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படுவது நேற்று முன்தினத்தோடு நிறுத்தப்பட்டது. அதேபோல பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறந்து விடப்பட்ட தண்ணீரும் நிறுத்தப்பட்டு விட்டது.பருவமழை பொய்த்துவிட்டதாலும், கோடை வெப்பம் அதிகமாக உள்ளதாலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளும் வேகமாக வறண்டு வருகின்றன.
இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. புழல் ஏரியில் தற்போதுள்ள நீர், சென்னை மக்களின் ஒரு மாத தேவைக்கே வருமா என்பது சந்தேகம் தான்.
0 comments:
Post a Comment