Advertisements

Monday, 20 March 2017

அதிபரின் அதிரடியால் வெளிநாட்டு மாணவர்கள் வருகை குறைவு


அதிபரின் அதிரடியால் வெளிநாட்டு மாணவர்கள் வருகை குறைவு

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்பின் குடியேற்றக் கொள்கை காரணமாக, அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளில் பயில வெளிநாட்டு மாணவர் விண்ணப்பிப்பது பெருமளவு குறைந்துள்ளதாக வந்துள்ள தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க கல்லூரிப் பதிவாளர்களின் சங்கம் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது. அதன்படி, அமெரிக்காவின் 40 சதவீத கல்லூரிகளில், வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயில விண்ணப்பிப்பது குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆசியாவிலிருந்து மாணவர்கள் விண்ணப்பிப்பது பெருமளவு சரிந்திருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் குடியேற்றக் கொள்கை காரணமாகவே இந்த நிலையாம்.

ஈரான், சிரியா, ஏமன், லிபியா உட்பட 6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கும் உத்தரவை அதிபர் டிரம்ப் சமீபத்தில் பிறப்பித்தார். இந்த உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளதை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதேபோல் சர்வதேச அளவில் மாணவர்கள் அமெரிக்காவிற்கு கல்வி பயில வருவதன் மூலம், அந்நாட்டிற்கு ஆண்டுதோறும் 32 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வருவாய் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates