Advertisements

Sunday, 12 March 2017

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளர்: இன்று நேர்காணல்

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளர்: இன்று நேர்காணல்

சென்னை : சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் இன்று (மார்ச் 13) நடைபெற உள்ளது.யார் வேட்பாளர் : கடந்த 2 நாட்களாக விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டன. கடந்த முறை ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டு, தோல்வியடைந்த சிம்லா முத்துசோழன் உள்ளிட்ட 20 பேர் விருப்பமனுக்கள் அளித்துள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் இன்று நடக்கிறது. அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் இந்த நேர்காணலில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர் அன்பழகன் வேட்பாளரை தேர்வு செய்ய உள்ளனர். நேர்காணல் முடிவடைந்ததும், தி.மு.க. உயர்மட்டக்குழுவில் வேட்பாளர் தேர்வு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இந்த கூட்டத்துக்கு பிறகு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates