தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் ஒபாமா மீது மீண்டும் டிரம்ப் குற்றச்சாட்டு
தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் ஒபாமா மீது மீண்டும் டிரம்ப் குற்றச்சாட்டு
வாஷிங்டன் : தனது தொலைபேசியை ஒட்டு கேட்பதற்கு முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உத்தரவிட்டார் என்று மீண்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். குற்றச்சாட்டை திரும்ப பெற்றுக்கொள்ள கோரிக்கைகள் வலுத்தபோதும் அதனை டிரம்ப் நிராகரித்துவிட்டார். அமெரிக்க அதிபர் தேர்தலின்போது நியூயார்கில் உள்ள டிரம்ப் டவர் என்ற தன்னுடைய பல மாடிக் கட்டிடத்தில் பிரசார அலுவலகம் அமைத்து டிரம்ப் செயல்பட்டு வந்தார். அப்போது தனது அலுவலக தொலைபேசியை ஒட்டுகேட்பதற்கு ஒபாமா உத்தரவிட்டார் என்று சமீபத்தில் டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார். ஒபாமா ஆட்சிக்காலத்தில் இருந்த தேசிய உளவு பிரிவுத்துறை இதனை திட்டவட்டமாக மறுத்தது.
இந்நிலையில், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் உடன் அதிபர் டிரம்ப் இணைந்து நிருபர்களை சந்தித்தார்.
அப்போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அதிபர் டிரம்ப், ''பல ஆண்டுகளுக்கு முன்னதாக மெர்க்கலின் தொலைப்பேசி ஒட்டுகேட்கப்பட்டதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சி கூறியுள்ளது'' என்றார். அவர் மேலும் கூறுகையில், ''என்னுடைய தொலைப்பேசியும் ஒபாமா அரசால் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் பிரிட்டன் ஏஜென்சி உளவு பார்த்ததாக 'பாக்ஸ் நியூஸ்' சேனல் கூறியதை நான் ஒப்புக்கொள்ளவில்லை. இதனை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை" என்றார்.
முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவிற்கு ஜிசிஎச்கியூ என்னும் புலனாய்வு அமைப்பு உளவு பார்ப்பதற்கு உதவியதாக 'பாக்ஸ் நியூஸ்' கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுவரை டிரம்ப் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டது தொடர்பான எந்த ஆதாரங்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment