தூங்கறதுக்கு சம்பளம்... அட இது சீனாவில்...
தூங்கறதுக்கு சம்பளம்... அட இது சீனாவில்...
பெய்ஜிங்: என்ன தூங்கறதுக்கு சம்பளமா? அட தூங்குமூஞ்சிகளா... இது இங்கல்ல... சீனாவில்.
பிரபல சீன உடல்நல ஊட்டச்சத்து நிறுவனமான 'நாவ் பாய்ஜின்' தான் இப்படி ஒரு அரிய வேலை வாய்ப்பை வழங்குகிறது. இந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நிறுவனத்தின் பொருட்களைச் சோதிக்கத் துணைபுரிவார்கள்.
ஊட்டச்சத்துப் பொருளை உட்கொண்டு, தூக்கத்தின் தரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைச் சோதிக்க வேண்டும். பின்னர் அது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த வேலை தப்போது சீனாவில் பிரபலமடைந்து வருகிறது. உலகின் மிக சொகுசான வேலை என்று இந்த வேலையை பாராட்டி வருகின்றனர்.
அடபோங்கப்பா...
0 comments:
Post a Comment