தவறான தகவல் பரப்பும் யூ டியூப் சேனல்கள் மீது புகார் அளித்த லாரன்ஸ் தரப்பு..!
தவறான தகவல் பரப்பும் யூ டியூப் சேனல்கள் மீது புகார் அளித்த லாரன்ஸ் தரப்பு..!
சென்னை: தவறாக சில யூடியூப் சேனல்கள் தகவல் பரப்புகின்றன அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராகவா லாரன்ஸ் நற்பணி மன்றத்தினர் புகார் கொடுத்துள்ளனர்.
ராகவா லாரன்ஸ் சமீப காலமால சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இதற்கு அடிப்படை காரணமாக ஜல்லிக்கட்டில் கடைசி நாள் வரை இளைஞர்களுடன் இருந்ததுதான் என்று அனைவருக்கும் தெரியும்.
இவர் தன் அறக்கட்டளை வாயிலாக பல உதவிகளை செய்து வருகிறார், பல குழந்தைகளின் படிப்பு செலவை இவர் ஏற்று கட்டியுள்ளார்.
ஆனால், ஒரு சில யு-டியூப் சேனல்கள் இவரை பற்றி அவதூறு தகவல்கள் பரப்பி வருவதாக ராகவா லாரன்ஸ் நற்பணி மன்றத்தினர் புகார் கொடுத்துள்ளனர்.
அவர்கள் மீது உடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment