Advertisements

Thursday, 16 March 2017

எழுத்தாளர் சாரு நிவேதிதா அதிரடி சவால் .....

டிடிவி தினகரன் வெற்றி பெற்றால் நாட்டை விட்டே வெளியேற தயார் ...எழுத்தாளர் சாரு நிவேதிதா அதிரடி சவால் .....

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வெற்றி தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல்  வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைப்பெற உள்ளது.
இந்த தேர்தலை சந்திக்க திமுக அதிமுக  இடேயே  கடும் போட்டி நிலவுகிறது. இதில் அதிமுக  சார்பாக, தற்போதைய அதிமுக பொதுச்செயலாளராக உள்ள டிடிவி தினகரன் வேட்பாளராக  அறிவிக்கப்பட்டுள்ளது.  இவருக்கு எதிராக அதிமுகவிலிருந்து பிரிந்து வந்த ஒபிஎஸ் அணியின் சார்பாக மதுசூதனன் வேட்பாளராக  அறிவிக்கப் பட்டுள்ளது.
ஒரு சிலர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தாலும், பெரும்பாலான  மக்கள்  எதிரான  கருத்துக்களையே  தெரிவிதுள்ளனர். ஆனால் டிடிவி தினகரன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என கூறியுள்ளார்.இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றால், இந்த நாட்டை விட்டே வெளியேறி விடுவேன் என எழுத்தாளர் சாரு நிவேதா தனது ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது .
இந்த விவகாரம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates