பொய்... இது முற்றிலும் பொய்... குற்றம் சாட்டுது "ஜியோ"...
பொய்... இது முற்றிலும் பொய்... குற்றம் சாட்டுது "ஜியோ"...
மும்பை: பொய்... முற்றிலும் பொய் என்று ஜியோ சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேக இணைய சேவை வழங்குவதாக வெளியான ஏர்டெல் நிறுவனத்தின் விளம்பரம் முற்றுலும் பொய் என்று ரிலையன்சின் ஜியோ புகார் அளித்துள்ளது.
இணைய வேகத்தின் அளவை கணக்கிடும் தனியார் நிறுவனமான ஊக்லா இந்தியாவில் பாரதி ஏர்டெல் நிறுவனம் அதிவேகமான இணைய சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்தது.
இதை அடிப்படையாக கொண்டு ஏர்டெல் நிறுவனம் விளம்பரங்களை வெளியிட்டது. இந்நிலையில் அதிவேக இணைய சேவை வழங்குவதாக ஏர்டெல் விளம்பரப்படுத்துவது முற்றிலும் பொய் என்று ஜியோ நிறுவனம் இந்திய விளம்பர கவுன்சிலில் புகார் அளித்துள்ளது.
இரட்டை சிம் கார்டுகள் கொண்ட செல்போன்களில், ஊக்லா நிறுவனம் நடத்திய இணைய வேக சோதனையில் பிழை உள்ளது. அரசு சார்பற்ற ஒரு தனியார் அமைப்பின் முடிவுகளை கொண்டு, அதிவேக இணைய சேவை வழங்குவதாக ஏர்டெல் அதிகாரப்பூர்வமாக விளம்பரப்படுத்துவது தவறு. இவ்வாறு ஜியோ குற்றம் சாட்டியுள்ளது. இருக்கட்டும்... அப்போ யார்தான் உண்மையிலேயே ஸ்பீடு இணையத்தை தர்றீங்க...
0 comments:
Post a Comment