Advertisements

Thursday, 23 March 2017

என்னாது இவ்வளவு பணியிடங்கள் காலியா? மக்கள் அதிர்ச்சி

என்னாது இவ்வளவு பணியிடங்கள் காலியா? மக்கள் அதிர்ச்சி

புதுடில்லி: என்னாது இவ்வளவு பணியிடங்கள் காலியாக உள்ளதா என்று அதிர்ச்சி கேள்வி கேட்கின்றனர் பொதுமக்கள். என்ன விஷயம் தெரியுங்களா?

நாடு முழுவதும் 1,400 ஐ.ஏ.எஸ்., மற்றும் 900 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து லோக்சபாவில் மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:

நாடு முழுவதும் ஒதுக்கப்பட்ட 6,396 ஐ.ஏ.எஸ்., பணியிடங்களில், 4,926 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணிபுரிகின்றனர். 1,470 இடங்கள் காலியாக உள்ளது. அதிகபட்சமாக பீஹாரில் 128 பணியிடங்களும், உ.பி.,யில் 117 பணியிடங்களும், மேற்கு வங்கத்தில் 101 பணியிடங்களும் காலியாக உள்ளன.

இதேபோல் 4,802 ஐ.பி.எஸ்., பணியிடங்களில், 3894 அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். 908 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதிகமாக உ.பி.,யில் 114, மேற்கு வங்கத்தில் 99, ஒடீசாவில் 79, கர்நாடகாவில் 72, பீஹாரில் 42 பணியிடங்கள் காலியாக உள்ளன.

மொத்தமுள்ள 3,157 ஐ.எப்.எஸ்., பணியிடங்களில் 2,597 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. 560 பணியிடங்கள் காலியாக உள்ளத. மகாராஷ்டிராவில் 46, ம.பி., தமிழகம் மற்றும் ஒடிசாவில் தலா 45 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக இருக்குன்னு சொல்லாம அதை நிரப்ப என்ன வழின்னு பாருங்க என்கின்றனர் பொதுமக்கள்.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates