தாய்லாந்து மக்களின் மூட நம்பிக்கையால் நிகழ்ந்த விபரீதம்: ஆமையின் வயிற்றில் 5 கிலோ நாணயங்கள் கண்டெடுப்பு
தாய்லாந்து: தாய்லாந்தின் ஸ்ரீரச்சா பகுதியில் உள்ள ஒரு பூங்காவின் ஏரியில் உள்ள ஆமையின் வயிற்றில் 5 கிலோ நாணையங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்னர் இந்த ஆமை, நீந்த முடியாமல் கஷ்டப்பட்டிருந்தது. அப்போது இதனை சோதனை செய்து பார்த்தபோது இதன் வயிற்றில் அதிக அளவிலான நாணயங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று நடந்த அறுவை சிகிச்சையில் இந்த ஆமையின் வயிற்றில் இருந்து சுமார் 5 கிலோ நாணயங்கள் எடுக்கப்பட்டது. அதாவது, மொத்த நாணயங்களின் எண்ணிக்கை மட்டும் 915 ஆகும்.
அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுடைய நாட்கள் நன்றாக தொடங்க வேண்டும் என்பதற்காக அந்த ஏரியில் நாணையங்களை வீசுவது வழக்கம். இந்த நாணையங்கள் தான் ஆமையின் உணவுகளோடு சேர்ந்து வயிற்றில் தங்கியுள்ளது. சுமார் 7 மணி நேரம் இதற்கான அறுவை சிகிச்சை நடந்துள்ளது. தாய்லாந்து நாணயங்கள், வெளிநாட்டு நாணயங்கள், மீன்பிடி கொக்கிகள் உள்ளிட்ட பொருட்கள் மட்டும் சுமார் 5 கிலோ அளவுக்கு ஆமையின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. தற்போது சிகிச்சைக்குப் பின் ஆமை நலமாக உள்ளதாகக் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments:
Post a Comment