Advertisements

Monday, 13 March 2017

தன்னை மக்கள் சூப்பர் ஸ்டாராக ஏற்றுக்கொண்ட சூப்பர் ஸ்டார் - துள்ளி குதிக்கும் லாரன்ஸ்...

தன்னை மக்கள் சூப்பர் ஸ்டாராக ஏற்றுக்கொண்ட சூப்பர் ஸ்டார் - துள்ளி குதிக்கும் லாரன்ஸ்...

நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் நிக்கி கல்ராணி  நடிப்பில் கடந்த வாரம்  'மொட்ட சிவா கெட்ட சிவா' படம் வெளிவந்தது . இப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் , சுமார் என்பது போல் தான் பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த படத்தில் முதல் முறையாக மக்கள் சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தையும் தன்னுடைய பெயருக்கு முன்னாள் போட்டுள்ளார் ராகவா லாரன்ஸ் இது பல சர்ச்சைகளை சந்தித்த போது  இயக்குனர் தான் அப்படி போட்டார் என கூறி எஸ்கேப் ஆனார் லாரன்ஸ்.

மக்கள் சூப்பர் ஸ்டார் என்று பெயர் போட்டுக்கொண்டதால் தன்னை தவறாக நினைத்து விடுவாரோ ரஜினிகாந்த் என்கிற ஒரு வித பயத்துடன் அவரை சந்தித்துள்ளார் ஆனால்,  ரஜினி லாரன்ஸை கண்டதும் கட்டுத்தழுவி பாரட்டியுள்ளார்.

இதை சற்றும் எதிர்ப்பார்க்காத லாரன்ஸ் எனக்கு இதுவே போதும், ரஜினி அண்ணன் ஆசீர்வாதம்  கிடைத்துவிட்டது என செம்ம சந்தோஷத்தில் துள்ளி குதித்து சந்தோஷப்பட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates