Advertisements

Saturday, 18 March 2017

இந்தியா முழுவதும் பா.ஜ.வை கைப்பற்றுவேன்: மம்தா

இந்தியா முழுவதும் பா.ஜ.வை கைப்பற்றுவேன்: மம்தா

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங். கட்சியை கைப்பற்ற பா.ஜ. முயற்சித்தால், இந்தியா முழுவதும் உள்ள பா.ஜ. கட்சியை திரிணாமுல் காங். கைப்பற்றும் என முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

உ.பி. சட்டசபை தேர்தலில் பெற்ற சாதனை வெற்றியை தொடர்ந்து மேற்குவங்கம், ஒடிசா, உள்ளிட்ட பா.ஜ. அல்லாத மாநிலத்தையும் பா.ஜ.குறி வைப்பதாக வெளியான செய்தி குறித்து நிருபர்கள் கேட்டதற்கு மம்தா பானர்ஜி கூறியது,

மேற்குவங்கத்தில் வெறும் மூன்று அல்லது நான்கு பா.ஜ.எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு, மாநிலத்தையே கைப்பற்ற பா.ஜ. நினைப்பது வேடிக்கையாக உள்ளது. . எனது கட்சியை வளைக்க பா.ஜ. முயற்சித்தால், இந்தியா முழுவதும் உள்ள பா.ஜ.
கட்சியை திரிணாமுல் காங். கைப்பற்றும் என எச்சரிக்கிறேன். மற்ற மாநிலங்களில் பிரித்தாலும் அரசியலை பா.ஜ. மேற்கொள்ளலாம்.

ஆனால் எனது மாநிலமான மேற்குவங்கத்தில் அது ஒரு போதும் நடக்காது. நடக்கவும் விடமாட்டேன். பா.ஜ.வின் பிரித்தாலும் அரசியலை எங்களது மேற்குவங்க மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றார்.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates