இந்தியாஆந்திராவில் சித்தரவதை செய்து தமிழர்கள் கைது: 179 பேரும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்
இந்தியாஆந்திராவில் சித்தரவதை செய்து தமிழர்கள் கைது: 179 பேரும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்
பொதட்டூர்: செம்மரம் வெட்ட வந்ததாக கூறி கைது செய்யப்பட்ட தமிழர்கள் 179 பேரை ஆந்திரா வனத்துறையினர் சித்தரவதை செய்வதாக புகார் எழுந்துள்ளது. தார்ப்பாய் போட்டு போர்த்திய லாரியில் ஆடு, மாடுகளை போல் அனைவரையும் ஏற்றி சென்ற அவலமும் அரங்கேறியது. கைது செய்யப்பட்ட தமிழர்கள் 179 பேரும் பொதட்டூரில் உள்ள நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர். ஆந்திரா வனப்பகுதிகளில் செம்மரக் கடத்தலை தடுக்க அம்மாநில அரசு கடந்த 2 ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக 20க்கும் மேற்பட்டவர்கள் அப்பகுதியில் வனத்துறையினரால் சுட்டு கொலை செய்யப்பட்டனர். தொடர்ந்து அம்மாநில அரசு செம்மரக்கடத்தலை தடுப்பதற்கான கடுமையாக திட்டங்களை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு என்ற போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. ஆந்திரா வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு இது தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டபோது, 16 பேர் அப்பகுதியில் நடமாட்டம் இருப்பதை உணர்ந்த போலீசார் சுற்றி வளைத்து அவர்களை கைது செய்தனர். கடத்தல் கும்பலின் எண்ணிக்கை காட்டிலும் போலீசாருடைய எண்ணிக்கை குறைவாக இருந்தது. முதல் கட்டமாக 16 பேரை பிடித்தனர், மற்றவர்கள் தப்பியோடினர். சுமார் இவர்களிடம் இருந்து ரூ.7 கோடி மதிப்புடைய செம்மரக்கட்டைகளும், கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 179 பேரை இதுவரைக்கும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்களை குறித்த விவரங்களை போலீசார் தனித்தனியாக விசாரித்து வருகின்றனர். 179 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்னும் சிலர் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகியது. அவர்களை பிடிக்க தேடுதல் வேட்டையில் தொடர்ந்து வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தார்ப்பாய் போட்டு போர்த்திய லாரியில் ஆடு, மாடுகளை போல் ஏற்றி வந்தது மனித உரிமை அளவில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
0 comments:
Post a Comment