Advertisements

Wednesday, 15 March 2017

வெவ்வேறு இடத்தில் ரயில் முன் பாய்ந்து 2 பெண்கள் உட்பட 3 பேர் தற்கொலை

வெவ்வேறு இடத்தில் ரயில் முன் பாய்ந்து 2 பெண்கள் உட்பட 3 பேர் தற்கொலை
சோளிங்கர்: வெவ்வேறு இடங்களில், ரயில் முன் பாய்ந்து, இரண்டு பெண்கள் உட்பட, மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டனர்.வேலூர் மாவட்டம், திருத்தணியை சேர்ந்தவர் ருக்மணி, 45. இவர் மார்ப்பக புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். கடந்தாண்டு ஆப்பரேஷன் செய்தும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த ருக்மணி, நேற்று காலை, 6:00 மணிக்கு, திருத்தணி திரவுபதி அம்மன் கோவில் வழியாக வந்த திருத்தணி- அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அதேபோல், திருத்தணியை சேர்ந்தவர் நீலா, 70. அல்சர் நோயால் பாதிக்கப்பட்ட இவர், நீண்டகாலமாக சிகிச்சை மேற்கொண்டும் நோய் குணமாகவில்லை. இதனால் நோய் கொடுமை தாங்காமல், திருத்தணி ரயில்வே கேட் அருகில், திருப்பதியில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயில் முன், நேற்று காலை, 9:00 மணிக்கு பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார்.
இந்த, இரு தற்கொலை குறித்தும், அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாணாவரத்தை சேர்ந்தவர் ஆதிமூலம், 40. இவர் காட்பாடியில் இருந்து அரக்கோணத்திற்கு செல்லும் மின்சார ரயிலில், நேற்று காலை, 7:00 மணிக்கு சென்றார். அப்போது சோளிங்கபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் நின்ற போது இறங்கிய அவர், ரயில் புறப்பட்ட போது ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

சோளிங்கபுரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates