அரசு பள்ளி மாணவர்களுக்கு யோகா அடிப்படை பயிற்சி
அரசு பள்ளி மாணவர்களுக்கு யோகா அடிப்படை பயிற்சி
வேலூர்: பொத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு அடிப்படை யோகா பயிற்சி வகுப்பு நடந்தது.ப.வேலூர் அடுத்த, பொத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். மாணவர்களிடையே யோகா குறித்து, உலக சமுதாய சேவா சங்கம் மற்றும் நாமக்கல் அறிவு திருக்கோவில் சார்பில், கடந்த ஒரு மாதமாக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, நேற்று நிறைவுற்றது. உடற்பயிற்சி, காயகல்பம், தியானம் ஆகிய வாழும் கலை பயிற்சிகள் அளிக்கப்பட்டு மாணவ, மாணவியருக்கு தீட்சை வழங்கப்பட்டது. நிறைவு விழாவில் மாவட்ட கல்விக்குழு துணைத் தலைவர் அப்புசாமி, பேராசிரியர் முத்துவேல், தலைமையாசிரியர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment