Advertisements

Tuesday, 21 March 2017

மெரினா காமராஜர் சாலையில் சோலார் மின்விளக்கு கம்பத்தில் பேட்டரி திருடிய 3 பேர் கைது


மெரினா காமராஜர் சாலையில் சோலார் மின்விளக்கு கம்பத்தில் பேட்டரி திருடிய 3 பேர் கைது

சென்னை: மெரினா காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின் விளக்கு கம்பத்தில் இருந்து பேட்டரிகளை திருடிய 3 பேரை போலீசார் கைது ெசய்தனர். தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மாநகராட்சி சார்பில் முக்கிய சாலையில் சோலார் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மெரினா காமராஜர் சாலையில் சில இடங்களில் இரு புறங்களிலும் சோலார் விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் நள்ளிரவு பட்டினப்பாக்கம் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 5 பேர், சோலார் விளக்கு கம்பத்தின் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
போலீஸ் வருவதை பார்த்ததும் 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் துரத்தி ெசன்று 3 பேரை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து சாக்கு பையை சோதனை செய்த போது அதில் சோலார் மின்விளக்கு கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்த 9 பேட்டரிகள் இருந்தன.

இதனால், சந்தேகமடைந்த போலீசார் 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, கோட்டூர்புரத்தை சேர்ந்த அருண் (28), பிரகாஷ் (25), வினோத் (28) என தெரியவந்தது. இவர்கள் இரவு நேரங்களில் பல இடங்களில் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின்விளக்கு கம்பத்தில் இருந்து பேட்டரிகளை திருடி குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 9 சோலார் பேட்டரிகளை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர்.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates