உபி.யில் பகுஜன் சமாஜ் தலைவர் சுட்டுக்கொலை
உபி.யில் பகுஜன் சமாஜ் தலைவர் சுட்டுக்கொலை
அலகாபாத்: உபியின் 21வது முதல்வராக யோகி ஆதித்யநாத் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டார். இந்த சூழ்நிலையில் நேற்று பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னணி தலைவர் அலகாபாத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதுபற்றிய விவரம் வருமாறு:உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள மவுயும்மா நகரம். இங்கு 5 முறை பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் முகமது ஷமி (60).
இவர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளன. சமாஜ்வாடி கட்சியில் இவர் நீண்ட காலமாக பொறுப்பில் இருந்தார். 2016ல் பகுஜன் சமாஜ் நேற்று அவரது வீட்டின் அருகே மர்ம நபர்களால் திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதை அறிந்த முகமது ஷமியின் ஆதரவாளர்கள் அலகாபாத்-பிரதாப்கார்க் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
0 comments:
Post a Comment