Advertisements

Sunday, 12 March 2017

கோவாவை தொடர்ந்து மணிப்பூரிலும் ஆட்சியமைக்க பா.ஜ தீவிரம் : அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக காங்., புகார்


கோவாவை தொடர்ந்து மணிப்பூரிலும் ஆட்சியமைக்க பா.ஜ தீவிரம் : அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக காங்., புகார்

சிம்லா: தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்காமல் மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்ற, பாரதிய ஜனதா கட்சியினர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. சிம்லாவில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் விதர்பா சிங், பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளதை சுட்டிக்காட்டினார்.

அதே போல கோவாவில் மொத்தமுள்ள 40 இடங்களில் 17 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ள போதிலும், 13 இடங்களை வென்ற பாரதிய ஜனதா மக்கள் தீர்ப்பை ஏற்காமல் பணபலம் மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினார். பாரதிய ஜனதாவிடம் தான் அனைத்து அதிகாரமும் உள்ளதாக சாடிய அவர், மத்தியலும் அவர்களது அதிகாரம் தான் கொடிகட்டி பறப்பதாக குறிப்பிட்டார்.

இதே போல 60 உறுப்பினர்களை கொண்ட மணிப்பூரில் 28 இடங்களுடன் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உள்ள போதிலும், ஆட்சியமைக்க இன்னும் 3 M.L.A-க்களின் ஆதரவு தேவை. ஆனால் தங்களுக்கு 30 M.L.A-க்களின் ஆதரவு இருப்பதாக கூறும் பாரதிய ஜனதா, ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளது.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates