Advertisements

Saturday, 18 March 2017

வித்யா பாலனா? தீபிகா படுகோனா... இது கோலிவுட் பரபர...

வித்யா பாலனா? தீபிகா படுகோனா... இது கோலிவுட் பரபர...

சென்னை: வித்யா பாலனா? தீபிகா படுகோனா என்ற பேச்சுதான் தற்போது கோலிவுட் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எதற்காக என்கிறீர்களா?

ரஜினி, தனுஷ் தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் அடுத்தப்படம் நடிக்க இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நாயகிகள் தீபிகா படுகோனே அல்லது வித்யா பாலன் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே தீபிகா படுகோன் ரஜினியுடன் இணைந்து கோச்சடையான் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கபாலி படத்தை பார்த்துவிட்டு தான் ரஜினியின் தீவிர ரசிகை என்று வித்யாபாலன் கூறியிருந்தார்.

இப்போ... யார்... யாருங்க...ரஜினிக்கு ஜோடியாவாங்க...
என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates